கரூர் சம்பவத்தை வைத்து உருவான 'TVK' திரைப்படம்.. விஜய்யை டைரக்ட்டா டார்கெட் பண்றாங்களா?

சென்னை: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் மட்டுமே அரசியல் பஞ்சாயத்தை ஏற்படுத்தும் என தேர்தல் ஆணையத்தை அந்த படத்தை பார்க்க மத்திய சான்றிதழ் வாரியம் அறிவுறுத்திய நிலையிலும் இன்னமும் ஜன நாயகன் படத்திற்கான சான்றிதழ் வழங்கப்படவே இல்லை.

ஆனால், தேர்தலுக்கு முன்பாக விஜய்க்கு எதிரான அரசியல் படங்கள் அடுத்தடுத்து வேறு வேறு முகமூடிகளை அணிந்துக் கொண்டு வெளியாகி அவரை அட்டாக் செய்யப் போகிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

TVK titled movie with Karur Stampede background shocks Vijay fans

ஏற்கனவே நட்டி நட்ராஜின் TN2026 தங்கநட்சத்திரம் படம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது TVK டைட்டிலிலேயே ஒரு படத்தை உருவாக்கி அதன் டீசரையும் வெளியிட்டுள்ளனர்.

கரூர் சம்பவத்தை வைத்து படம்: கரூர் என்பதற்கு பதில் அரூர் என போட்டு 'TVK' டைட்டிலிலேயே ஒரு படத்தை மேக்னா மற்றும் JTJ இணைந்து உருவாக்கியுள்ளனர். அதன் டீசர் தான் தற்போது சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகிறது. அரூர் எனும் ஊரில் நடிகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல மக்கள் உயிரிழந்த கதையை அப்படியே படமாக்கி எடுத்துள்ளனர். இப்படியொரு படத்தை எப்படி எடுத்தனர் என்றும் இதற்கெல்லாம் அனுமதி எப்படி கிடைத்தது என்றும் விஜய்க்கு எதிராகவே இது போன்ற குறைந்த பட்ஜெட்டில் படங்களை அவசர அவசரமாக உருவாக்கி வெளியிடுகிறார்களா? என்கிற கேள்வியை தவெக தொண்டர்களும் தளபதி ரசிகர்களும் எழுப்பி வருகின்றனர்.

விஜய்க்கு எதிரான சதி?: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 41பேர் பலியான வழக்கு சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இப்படியொரு படத்தை உருவாக்கியதே விஜய்க்கு எதிரான சதி என தவெகவினர் சோஷியல் மீடியாவில் திட்டி வருகின்றனர். ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கி பார்த்தும் விஜய் அடிபணியாமல் தொடர்ந்து களத்தில் போராடி வருவதால், அவரை இதுபோன்ற சினிமாக்களை உருவாக்கி டார்கெட் செய்கிறார்களா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

மக்கள் நாயகன்: ஜன நாயகன் விஜய்யை தேர்தலுக்கு முன்பு மக்கள் பார்த்து விட நினைத்து காத்துக் கொண்டிருக்க அந்த படம் எப்போது வரும் என்கிற எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், வரும் ஏப்ரல் 14ம் தேதி மக்கள் நாயகன் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தொலைக்காட்சி பேட்டி வழியாக விஜய் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிந்த உடனே ஜன நாயகன் படத்துக்கான தடைகள் நீங்கி ரிலீஸுக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X