குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,500.. அண்ணன் சீர், தாய்மாமன் சீர்.. தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்!

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டடிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று விழா நடத்தப்பட்டது. இதில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மகளிருக்கான பிரத்யேகத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

பெண்களின் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக வழங்கப்படும். 60 வயது வரையுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிதியில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும். தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் கேஸ் விலை குறைக்கப்படுகிறது. சமையல் கேஸ் விலை நம் வீட்டு பெண்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. விலை உயர்வால் காதுகளில் புகை, கண்களில் நீர் வருகிறது. அதை போக்க அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

Vijay TVK Vijay Women s Day

தங்க மோதிரம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலையம்மாள் அதி விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பள்ளி இடைநின்றலை இல்லாமல் செய்ய தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளையும் வரவேற்கும் விதமாக அரசாங்கத்தின் ஆசிர்வாதமாக தங்க மோதிரம் வழங்கப்படும்; கூடவே Baby Welcome Kit வழங்கப்படும்.

இலவச பேருந்து: கட்டணமில்லா பேருந்து என அறிவித்துவிட்டு, அது பிங்க் நிற பேருந்தில் பயணம் செய்தால் என அறிவித்து இருப்பதால், பெண்களும், கல்லூரி மாணவிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால் தமிழக அரசின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய உத்தரவிடப்படும். இதன் மூலமாக எந்த இடத்திலிருந்தும், எந்த இடத்திற்கும் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம்.

அதிரடியான பல அறிவிப்பு: பெண்களுக்கு எதிராக குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை, விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை. இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் ராணி வேலு நாச்சியார் படை உருவாக்கப்படும். சாதாரண உடையில் இருக்கும் அந்த படையினர் 'பாடி கேம்ப்' மூலமாக ஆங்காங்கே பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு வசதியாக 'ஸ்மார்ட் பேனிக் பட்டன்' 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். இந்த பட்டன்கள் அனைத்து பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களில் பொருத்தப்படும். பெண்கள், குழந்தைகள் நலனில், பாதுகாப்பில் அக்கறை செலுத்த தவெகவில் தனி துறை ஏற்படுத்தப்படும். அந்த இலாகா என் நேரடி கட்டுப்பாடு, கண்காணிப்பில் இருக்கும். ரேசன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்குவது உறுதி செய்யப்படும் என

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X