முத்தம் கேட்டு மின்கம்பத்தில் ஏறிய ரசிகர்.. மிரட்டி கண்டித்த விஜய்.. அடடே நெகிழ வெச்சுட்டாரே தளபதி

பெருந்துறை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகர் விஜய், இன்று அதாவது டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி, விஜயமங்கலத்தின் அருகில் நடைபெற்றது. இதில் இவரைப் பார்க்க அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆயிரக் கணக்கில் கூடினர். விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்தது.

அதாவது, விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரது ரசிகர் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த உயரமான மின் கம்பத்தில் ஏறினார். ஏறியவரைப் பார்த்த விஜய் உடனே, தனது பேச்சை நிறுத்தி, தம்பி கீழ இறங்குப்பா என்று முதலில் மென்மையாக கூறினார். ஆனால் அந்த ரசிகர் கீழே இறங்கவில்லை. உடனே கோபமடைந்த விஜய், தம்பி கீழே இறங்கு என்று கடும் கோபத்தில் கண்டித்தார். உடனே அந்த ரசிகர் நீங்கள் முத்தம் கொடுத்தால், நான் கீழே இறங்குகிறேன் என்று கூறினார். உடனே விஜய், நீ கீழே இறங்கினால் தான் முத்தம் கொடுப்பேன் என்று கூறுகிறார். அதன் பின்னர், அந்த ரசிகர் பத்திரமாக கீழே இறங்கினார். அதன் பின்னர், நடிகர் விஜய் ஒரு பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டார். உடனே அங்கு கூடி இருந்த ரசிகர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

TVK Vijay Condemns Fan Boy Who Going Up To Lamp Post And Ask Flying Kiss

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது. அதேபோல் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். படம் ப்ரீ புக்கிங்கில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று படக்குழு நம்பிக் கொண்டு உள்ளது.

வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் நாட்டில் இருந்து எல்லாம் ரசிகர்கள் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கில் தொடங்கி லட்சக் கணக்கில் இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X