விஜய் அண்ணா CM ஆகிட்டாருடா.. அஜித் ஆடியோ லாஞ்ச்க்கு வராரு.. இணையத்தில் ரசிகர்கள் செய்யும் அலப்பறை

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்கியுள்ளார். தற்போது இவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் அஜித் குறித்து பேசப்பட்டுள்ளது.

தளபதி விஜய் அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறியதில் இருந்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளார்கள். இவரது கட்சிப் பெயர், கொடி, கொடி பாடல், கட்சியின் முதல் மாநில மாநாடு என அனைத்துமே அரசியல் தளத்தில் கவனம் பெற்று வருகிறது. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய் மற்றும் அவரது கட்சியினர் களமிறங்கவுள்ளதால் ரசிகர்கள் அவரது கட்சிக்கு வாக்கு அளிக்கவும் மக்களை வாக்களிக்க செய்யவும் களப்பணிகள் செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும்போது, இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வேகமாக விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. அதில் சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் பல விஷயங்கள் குறித்து நக்கல் மற்றும் நையாண்டி தனமாக கூறப்பட்டுள்ளது. இதில் விஜய் முதலமைச்சர் ஆகி விட்டார் எனவும் கூறப்படுகிறது.

TVK Vijay Fans Created Funny Video About Vijay Ajithkumar Goes Trending

விஜய்: அதாவது, நண்பர் ஒருவர் மிகவும் மோசமான உடல்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை குணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் அவரது நண்பர்கள் சில தகவல்களைக் கூறுகிறார்கள். அதாவது, மச்சான் ஆர்.சி. பி கப் ஜெயிச்சுடுச்சுடா.. தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் இலவசம் டா.. அஜித் ஆடியோ லான்ச்க்கு வராருடா.. நிர்மலா (மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) ஆண்டி ஜீரோ டேக்ஸ் ஆக்கிட்டாங்க.. இனிமேல் நாம் எல்லோரும் டேக்ஸ் கட்ட வேண்டிய அவசியம் இல்லைடா.. மச்சா அண்ணன் CM ஆகிட்டாருடா என்று மாறி மாறிக் கூறுகிறார்கள்.

வீடியோ: மருத்துவமனையில் படுத்த படுக்கையாக உள்ள நண்பன், அண்ணன் CM ஆகிட்டாருடா எனச் சொன்னதைக் கேட்டதும் உடனே எழுந்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுமட்டும் இல்லாமல், விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்தும் வருகிறார்கள். இந்த வீடியோவை விஜய்க்கு மாஸ் காட்ட விஜய் ரசிகர்கள் உருவாக்கி உள்ளார்கள். பலர் லைக்குகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

TVK Vijay Fans Created Funny Video About Vijay Ajithkumar Goes Trending
2026: அதே நேரத்தில் இந்த வீடியோவுக்கு இணைய வாசி ஒருவர் , இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்று பார்த்தீர்கள் என்றால், அவங்க சொல்ற ஒரு விஷயம் கூட நடக்க சாத்தியம் இல்லாதது தான் என பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொருவர், இந்த வீடியோ நண்பன் படத்தில் வரும் காட்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதால், படத்தில் ஜீவா ஏமாற்றம் அடைந்தார், அதேபோல் விஜய் ரசிகர்களும் ஏமாற்றம் அடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார்கள். 2026 தமிழ்நாடு தேர்தல் களம் எப்படியும் சூடு பிடிக்கும் என்பதால், விஜய் வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X