We Hug Vijay Anna: கட்டிப்புடுச்சா தப்பா? சிவனேனு இருந்த ரசிகர்களை உசுப்பிவிட்ட வேல்முருகனுக்கு பதிலடி!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களிலேயே இணையத்தை ஆக்கிரமிக்கும் அளவுக்கு மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரசிகர்களை பட்டியலிட்டால் இதில் விஜய் ரசிகர்கள் டாப் லிஸ்ட்டில் இருப்பார்கள். அதேபோல் விஜய் கட்சி தொடங்கி ஒரு ஆண்டுதான் நிறைவடைந்துள்ளது என்றாலும் இவரது ரசிகர் படை கட்சிக்கு ஆதரவாகவும் இணையத்தில் செயல்பட்டு வருகிறது. இதை விஜய் ஒருமுறை மிகவும் சந்தோஷம் பொங்க பேசியுள்ளார். இப்படியான நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விஜய் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக விஜய் வழங்கும் கல்வி விருதுகளை பெறப்போகும் மாணவ - மாணவிகள் குறித்து மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்தார். அதாவது கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகள் விஜய் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்த அவரைக் கட்டிப் பிடிக்கிறார்கள்.இதனைப் பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மிகவும் கொச்சையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, " இரண்டு கிராம் பரிசு கொடுத்ததும், நாம் முட்டாள் பசங்க, நான் நடிகனைக் குறை சொல்ல மாட்டேன். ஒரு வயது பெண்ணைக் கூட்டிக் கொண்டு போகிறான். மூன்று ஆண்டுகள் கழித்து 12ஆம் வகுப்பு முடித்து, டிகிரி முடிக்கும் பெண்ணை கூட்டிக் கொண்டு போகிறான். அறிவு வேண்டாமா தமிழனுக்கு? தான் பெற்று வளர்த்த பெண், நாளைக்கு மாற்றன் மனைவியாக வாழவேண்டிய ஒரு பெண், அப்பா முன்னிலையில், அம்மா முன்னிலையில் ஆயிரக்கணக்கான ஊடகங்களுக்கு முன்னிலையில், ஒரு சினிமா கூத்தாடிப் பயல கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாய். இது என்ன ஈனப்பிறவி, தமிழனின் பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணா ( கட்டிப்பிடிப்பது போல உடல்மொழியை வெளிப்படுத்துகிறார்), விஜய் நடிங்க, நன்றாக நடித்துள்ளாரா பாராட்டுங்க" என விமர்சித்தார்.

TVK Vijay Fans Gives Punches on Internet We Hug Vijay Anna To Politician Velmurugan Worst Comment
Photo Credit:

We Hug Vijay Anna: இவரது விமர்சனத்திற்கு இணையவாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதாவது, மகள் வயதில் இருக்கும் பள்ளிக் குழந்தைகள் விஜய்யை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவதை இவ்வளவு கொச்சையாக விமர்சிக்கிறாரே இதுதான் இவரது அரசியல் நாகரீகமா என்று கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்நிலையில் வேல் முருகனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் இணையத்தில் குதித்து விட்டார்கள். அவர்கள் 'We Hug Vijay Anna' என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

எவ்வளவு பரிசுத்தமான அன்பு: மேலும், மாணவிகள் விஜய்யை கட்டிபிடிக்கும் வீடியோக்களை பகிர்ந்து, " எவ்வளவு பரிசுத்தமான அரவணைப்பு இது. இந்த குழந்தைகளுக்கு மற்ற தலைவர்கள் ஊக்கமளிக்காமல் இருந்தபோது இவர் அவர்களை உயர்த்த முயற்சிக்கிறார். மற்றவர்கள் கண்ணியம் குறித்து கேள்வி கேட்கும்போது விஜய் மிகவும் மரியாதையாக நடத்துகிறார். இந்த குழந்தைகள் விஜய்யை ஓடிச்சென்று கட்டிப் பிடித்துக் கொள்வது கிட்டத்தட்ட 1000 சிறந்த பேச்சுகளுக்கு சமம்.

TVK Vijay Fans Gives Punches on Internet We Hug Vijay Anna To Politician Velmurugan Worst Comment
Photo Credit:

விஜய் அண்ணாவை: நம்பிக்கை கொடுக்கும் இந்த அரவணைப்பு குறித்து நாங்கள் சத்தமாக சொல்லுகிறோம், நாங்கள் விஜய் அண்ணாவை கட்டிப்பிடிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொருவர், ' மிகவும் மோசமான எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே சகோதர உணர்வோடு ஒருவரைக் கட்டி பிடிப்பதை மிகவும் கொச்சையாக விமர்சிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். அண்ணன் தங்கை உறவில் ஆபாசம் தெரிந்தால் உன் சிந்தனையில் தான் அழுக்கு உள்ளது என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X