வீட்டுக்காரரை விட விஜய்யை தான் பிடிக்கும்.. ரசிகைகள் அலப்பறை.. ஆனந்தக் கண்ணீரில் தளபதி!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. அரசியலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்க சினிமாவில் சம்பாதித்த பல நூறு கோடிகளையும் விஜய் செலவு செய்து வருகிறார் என்கிற விமர்சனங்கள் ஒருபக்கம் எழுந்தாலும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்காக எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை அழகாக காட்டி வருகிறார் என்கின்றனர்.

முக்கியமாக விஜய் நிச்சயம் நல்லாட்சி தருவார் என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது தான் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் பதற்றத்தை கொடுத்திருக்கிறது. மாநாட்டுக்கு ஏகப்பட்ட தடைகளை உருவாக்கினாலும், அதையெல்லாம் தாண்டி தற்போது விஜய் வெற்றிகரமாக தனது 2வது மாநில மாநாட்டை தொடங்கி நடத்தி வருகிறார்.

TVK Vijay female fans gives full support to Thalapathy Second State Meet at Madurai

இந்நிலையில், வீட்டுக்காரரை விட விஜய்யை தான் பிடிக்கும் என பெண் ரசிகை ஒருவர் பேசும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், வெயிலை கூட பொருட்படுத்தாமல் விஜய்யின் அட்வைஸையும் மீறி ஏகப்பட்ட தாய்மார்கள் பச்சக் குழந்தைகளுடன் மாநாட்டுக்கு குடும்பம் குடும்பமாக வந்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள்: தளபதி விஜய் தவெக தலைவராக மாறி விக்கிரவாண்டியை தொடர்ந்து தற்போது மதுரையில் 2வது மாநாட்டை நடத்தி வரும் நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா போல மக்கள் வெள்ளம் தவெக மாநாட்டில் அணி திரண்டிருக்கிறது. இன்று மாலை நடைபெற்று வரும் மாநாட்டுக்காக நேற்று காலையில் இருந்தே மக்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வரத் தொடங்கி விட்டனர். நள்ளிரவில் இருந்தே லட்சக் கணக்கான மக்கள் திரண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஒட்டுமொத்த மாநாட்டு திடலே மனித தலைகளாக காட்சியளிக்கின்றன.

வீட்டுக்காரரை விட விஜய் தான் பிடிக்கும்: கோயிலுக்குப் போக சொன்னாங்க சாமி கும்பிட சொன்னாங்க, என்னோட சாமி தளபதி விஜய் தான், அதனால் தான் இங்கே வந்தேன் என கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சச்சினுக்கும் தோனிக்கும் போர்டு வைத்து கொண்டாடியதை போல தற்போது இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை விஜய்க்காக வந்தோம் என்கின்றனர். ஒரு பெண் தொண்டர் கொஞ்சம் ஓவர்டோஸாக சென்று வீட்டுக்காரரை விட விஜய் தான் பிடிக்கும் என பேசியதை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

ஆனந்தக் கண்ணீர்: தன்னை காண மக்கள் கூட்டம் லட்சக் கணக்கில் அலை அலையாக வந்திருப்பதை விழா மேடைக்கு வந்து பார்த்த விஜய் இத்தனை பேருக்கும் முடிந்த வரை நல்லது செய்ய வேண்டும் என்கிற மனதுடன் கண்கலங்கிய காட்சிகளும் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X