Vijay Campaign: அப்பாவி மக்கள் பலி.. கரூர் விஜய் பிரச்சாரத்தில்.. காவல்துறை சொல்லியும் கேட்காத ரசிகர்கள்!
கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று அதாவது, செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். இதில் கரூர் மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அதில் கலந்து கொண்ட அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 31 பேர் பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக முதற்கட்டத்தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக இந்த சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சோக நிகழ்வுக்கு காரணமே, காவல்துறையின் கட்டுப்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் பின் பற்றாததுதான் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

காவல்துறை சார்பில் அறிவுருத்தப்பட்ட விதிமுறைகள் மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்தும், அவரது தொண்டர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்திருந்தனர். ஆனால் அவை எதுவுமே பின்பற்றப்படவில்லை என்பதும் இந்த துயரச் சம்பவத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கட்சியின் தரப்பில் இருந்து, “ கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள். உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து. வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும். காவல் துறையின் அறிவுறுத்தலின்படி. அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிவிருத்தி உள்ளார். ஆனால் அதை விஜய்யும் பின்பற்றவில்லை, அவரது கட்சித் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் என யாருமே பின்பற்றவில்லை என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











