தவெக மேடையில் நடந்த ருசீகரம்.. ஒரே சிரிப்பு.. தவெக உறுப்பினர்களையே ஸ்லீப்பர் செல்-னு சொன்ன விஜய்!

சென்னை: நடிகர் விஜய், தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூஞ்சேரியில் நடைபெற்றது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் மேடையில் அவர் பேசியது நகைச்சுவையாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்ததால், மேடையில் இருந்தவர்கள் விழாவில் கலந்து கொண்டவர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பொதுவாகவே நடிகர் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசுவதை கேட்க ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருக்கும் காரணம் அவர் பேசும் பல விஷயங்கள் அரசியல் கலந்ததாக இருக்கும். அதே நேரத்தில் அவரது ரசிகர்களுக்கு அவர் எது பேசினாலும் ரசனைக்குரியதாக இருக்கும் என்பதால், அவரது பேச்சை கேட்டு ரசிப்பார்கள். குறிப்பாக அவர் சொல்லும் குட்டிக் கதைகளுக்கு என்றைக்குமே தனி வரவேற்பு உள்ளது.

TVK Vijay TVK Vijay Speech Vijay

விஜய்: இப்படியான நிலையில், இவர் அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் இவரது பேச்சு அவரது ரசிகர்கள் வட்டாரத்தைக் கடந்து, பொதுமக்கள், அரசியல் தளத்தில் இருப்பவர்கள் என பலராலும் கவனிக்கப்படுகிறது. அப்படியான நிலையில் தனது கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது அவர் தனது கட்சியின் முதல் மாநாட்டு மேடையில், மத்தியில் ஆளும் பாஜகவை பாசிசம் என்றும் மாநிலத்தில் ஆளும் திமுகவை பாயாசம் என்றும் விமர்சித்திருந்தார்.

சிரிப்பு: மீண்டும் அதனைக் குறிப்பிட்டு, இன்றும் பேசினார். அதாவது, " மொழி என்பது அவரவர் விருப்பம். ஆனால் கட்டாயம் திணிப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என மத்திய அரசு கூறுகிறது. கல்விக்கான நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, அதை கேட்டுப் பெறவேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் இவர்கள் இருவரும் ட்விட்டரில் ஹேஸ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு உள்ளார்கள். அதாவது அவர்கள் அடிக்கிற மாதிரி அடிப்பார்களாம், நாம் நம்பி விட வேண்டுமாம். வாட் ப்ரோ... இட்ஸ் வெரி ராங் ப்ரோ.. ( மேடையில் சிரிப்பலை).

சம்பவம்: இதற்கிடையில் நம்ம பசங்க உள்ளே சென்று சம்பவம் செய்துவிட்டு வந்துவிடுகிறார்கள். அதாவது, TVK For TN எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து விட்டு திடீரென காணாமல் போய் விடுகிறார்கள். யார் சார் நீங்க எல்லாம், எங்க சார் இருக்கிறீர்கள்? ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி" எனக் கூறினார். விஜய்யின் இந்தப் பேச்சைக் கேட்டவர்கள் மேலும் சிரிக்க, விழா மேடை சிரிப்பு மேடையாக மாறியது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X