Vijay: வேலுநாச்சியார் பிறந்த நாள்.. மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழக விஜய்!
சென்னை: நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தக் கட்சியின் கொள்கைத் தலைவர்களாக, சுதந்திர போராட்ட வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், தந்தை பெரியார், காமராஜர், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக அறிவித்தார் விஜய். இதற்கான காரணத்தையும் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் தெரிவித்தார்.
இப்படியான நிலையில் சுதந்திர போராட்ட தியாகி, வீரமங்கை வேலுநாச்சியாருக்கு இன்று அதாவது, ஜனவரி 3ஆம் தேதி, 295வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் தனது கட்சி அலுவலகத்தில், வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையை முழுவதுமாக துறந்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், கொஞ்சம் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வரும் விஜய், தனது முதல் தேர்தல் களமாக, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். தேர்தலுக்கு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்னரே தனது பட வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டு, முழுவீச்சில் தேர்தல் பணிகளைச் செய்யவேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பண்ணையார் விஜய்: இப்படியான நிலையில் தனது கட்சி நடவடிக்கைகளை பனையூரில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு செய்து வருகின்றார் விஜய். இது பலராலும் பெரும் விமர்சிக்கப்படுகின்றது. குறிப்பாக, பெரியார், பாபாசாகேப் ஆகியோரின் நினைவு நாளுக்கு அவரது கட்சி அலுவலகத்திலேயே, புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார். இதனால், பண்ணையார் அரசியல் செய்கின்றாரா விஜய் என விமர்சனத்திற்கு ஆளானார்.
இணையதள அரசியல்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்காகவும், தமிழ்நாடு ஆளுநரைச் சந்திப்பதற்காகவும் மட்டுமே, விஜய் இதுவரை அரசியல் செயல்பாடுகளுக்காக வெளியே வந்த நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றது. மற்றபடி அனைத்துமே, விஜய் தனது எக்ஸ் தளத்தில் அரசியல் செய்து வருகின்றார். கள எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், இணையத்தில் அரசியல் செய்து வருகின்றார் விஜய் என பல அரசியல் கட்சியினர் நேரடியாக விமர்சிக்கின்றனர். ஆனாலும் விஜய் தொடர்ந்து அதையேதான் செய்து வருகின்றார் என்பதற்கு இணங்க, இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் சுதந்திர போராட்ட தியாகி, வீரமங்கை வேலுநாச்சியாருக்கு இன்று அதாவது, ஜனவரி 3ஆம் தேதி, 295வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் தனது கட்சி அலுவலகத்தில், வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளதைப் பகிர்ந்துள்ளார்.
வேலுநாச்சியார் பிறந்தநாள்: அதில், " ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" என பதிவிட்டுள்ளார். இதனை தமிழக வெற்றிக் கழகத்தினர் வேகமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











