Vijay: விஜய்யின் அரசியல் நான் போட்ட ஸ்கெட்ச்.. விஜய்யின் அப்பா சொல்லும் மாஸ்டர் பிளான்..!
சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி, முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார். தற்போது அவர் தனது கடைசி படமான 69வது படத்தில் நடித்தும் வருகின்றார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதாவது ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் இயக்குநர், நடிகர், விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்தரசேகர் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், அவரது தந்தையான எஸ். ஏ. சந்தரசேகர்தான். இவர், நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து சில படங்கள், விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கினார். ஓரளவிற்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்த பின்னர்தான், மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்டு நடிக்க வைத்தார்.

விஜய்யின் திரைவாழ்க்கையின் பெரும் பகுதியை கட்டமைத்தவர், அவரது தந்தைதான். இது மட்டும் இல்லாமல், அவரது ரசிகர் மன்றத்தினை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியது மட்டும் இல்லாமல், அதன் கட்டமைப்பிலும் அதிக கவனம் செலுத்தியவர் எஸ். ஏ.சி தான். இப்படியான நிலையில் விஜய்யின் கடைசிப் படத்தின் டைட்டில் நாளைய தீர்ப்பு என திரைத்துறையில் வேகமாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நாளைய தீர்ப்பு: அதாவது இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், " விஜய்யின் கடைசி படத்தின் டைட்டில் நாளைய தீர்ப்பு என தகவல்கள் வருகின்றது. ஆனால் அது உண்மையா எனத் தெரியவில்லை. அந்த டைட்டில் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அவரது முதல் படத்தின் டைட்டிலும் அதுதான். விஜய்யின் அரசியல் வருகை என்பது திட்டமிட்டதுதான். எனது படங்களில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த். எனது படங்கள் சமூக அக்கறை கொண்ட, படங்களாகவும் கதைக்களத்தைக் கொண்டதாகவும்தான் இருந்துள்ளது.

திட்டம்: அப்படி இருக்கும்போது, விஜயகாந்த் படங்களில் மக்களின் பிரச்னைகளைப் பேசும் நடிகராக நடித்து தலைவராக உருவானார். அதேபோல்தான், விஜய்யும் இன்றைக்கு உருவாகியுள்ளார். இது எல்லாம் ஏற்கனவே நான் திட்டமிட்டதுதான். இவ்வளவு அன்பை விஜய்க்கு கொடுக்கும் மக்களுக்கு எதாவது செய்யவேண்டும். அதுதான் சரி. விஜய் மாநாட்டில் பேசுவதற்கு முன்னர், பொற்றோர்களான எங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, அதன் பின்னர் பேசியது, பல இளைஞர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு இல்லையா" எனவும் பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











