இனிமே வொர்க் ஃப்ரம் ஹோம்னு கலாய்ப்பாங்களா.. தளபதி 69க்கு முன்னாடியே கள அரசியல்.. விஜய் பளிச்!

சென்னை: தளபதி 69 படத்தை முடித்த பின்னர் தான் நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக கள அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பரந்தூரில் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து நேரடியாக களத்திற்கு வந்து 910 நாட்கள் போராடிய மக்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என வெளிப்படையாக பேசி மக்களின் ஆதரவை அள்ளியுள்ளார்.

8 வழிச்சாலையை எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்த்த திமுக அரசு இன்று பரந்தூர் மக்களுக்கு எதிராக விமான நிலையம் அமைக்கும் பணியை முன்னெடுப்பது எதற்காக என்றும் உங்கள் நாடகத்தை பார்த்துக் கொண்டு இனியும் மக்கள் சும்மா இருக்கமாட்டாங்க என தவெக தலைவர் விஜய் அதிரடியாக பேசியுள்ளார்.

Vijay TVK Parandur Airport

மேலும், விவசாயிகள் பாதிக்காத அளவுக்கு விமான நிலையத்தை கொண்டு வரலாமே. நான் ஒருபோதும் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, உங்களின் ஆய்வை மறு ஆய்வு செய்து மக்களுக்காக ஆட்சி நடத்த வேண்டும் என மாநில அரசையும் ஒன்றிய அரசையும் கேட்டுக் கொள்கிறேன் என விஜய் பேசியுள்ளார்.

வொர்க் ஃப்ரம் ஹோம் விமர்சனம்: நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த நிலையில், விக்கிரவாண்டியில் தனது பிரம்மாண்ட மாநாட்டை கடந்த ஆண்டு நடத்தி முடித்தார். அதன் பின்னர் மக்களை அவர் நேரில் சந்திப்பது கிடையாது என்றும் மாநாட்டுக்கு நிலம் கொடுத்த மக்களையே பனையூருக்கு அழைத்து வந்து தான் பார்த்தார் என்றும் பாதிக்கப்படும் மக்களையும் தனது அலுவலகத்துக்கே வரவழைத்து வொர்க் ஃப்ரம் ஹோம் செய்கிறார் என கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. ஆரம்பத்தில் ட்விட்டர் அரசியல் என கலாய்த்தவர்கள் அடுத்து வெளியே வா விஜய் என கோஷமிட்டனர். இந்நிலையில், இன்று வெளியே வந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசியுள்ளார்.

Vijay TVK Parandur Airport

உங்க காலடி மண்ணை தொட்டு: பரந்தூரில் இருந்து என்னோட அரசியல் கள பணியை தொடங்குகிறேன். ராகுல் என்கிற சிறுவன் வெளியிட்ட வீடியோவை பார்த்துதான் இங்கே நடைபெறும் போராட்டம் குறித்து முழுமையாக அறிந்துக் கொண்டேன். உடனடியாக உங்களுக்காக வர வேண்டும் என நினைத்தேன். ஏகப்பட்ட கெடுபிடிகள் அனுமதி மறுப்பு. இப்போ கூட உங்க ஏகளாபுரம் ஊருக்குள் வர எனக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. கூடிய விரைவில் ஊருக்குள் வந்து பேசுவேன். வீட்டுக்கு எப்படி பெரியவங்க முக்கியமோ அதே போல விவசாயிங்க தான் நாட்டுக்கு முக்கியம். உங்க காலடி மண்ணை தொட்டு வணங்கி என்னோட கள அரசியலை பரந்தூரில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்றார்.

Vijay TVK Parandur Airport

திமுகவுக்கு டைரக்ட் அட்டாக்: விவசாய நிலங்களையும் சதுப்பு நிலங்களையும் அழிப்பதால் தான் ஏகப்பட்ட வெள்ள பாதிப்புகள் வருகின்றன. ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவது போல நடிக்க அந்த கட்சிக்கு நல்லாவே தெரியும். நம்பும்படி நடிப்பது தான் அவர்களுக்கு கை வந்த கலை என திமுகவை டைரக்ட்டாக அட்டாக் செய்து பேசினார் விஜய். கேரவன் விட்டு கீழே இறங்குங்க விஜய் என்றும் துண்டு சீட்டு எழுதி வைத்துக் கொண்டு தான் உங்களால் பேச முடியும். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க திராணி இருக்கா என்றும் சோஷியல் மீடியாவில் திமுகவினர் விஜய்க்கு எதிரான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vijay tvk விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X