நடிகையுடன் தொடர்புபடுத்தி அவதூறுப் பேச்சு.. பதிலடி கொடுத்த விஜய்.. இதுக்கு மேல அந்த பருப்பு வேகாது பாஸ்
வேலூர்: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதில் பல விஷயங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் சொன்ன குட்டிக்கதை, தனது உரைக்கு நடுவே அழுதது. அதேபோல் உரையை முடித்துவிட்டு தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் தனது வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது உள்ளிட்டவை பலரது கவனத்தை ஈர்த்தது.
நடிகர் விஜய்யை பிரபல நடிகையுடன் தொடர்பு படுத்தி, விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் நடிகர் பேசினார். இது தொடர்பாக திரைத்துறையில் இருந்தும் அரசியல் தளத்தில் இருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நடிகையும் நடிகர் விஜய் பெயரைக் குறிப்பிடாமலும் தன்னை விஜய் உடன் தொடர்பு படுத்தி பேசிய அரசியல்வாதியான நயினார் நாகேந்திரன் பெயரைக் குறிப்பிடாமலும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவதூறுகளுக்கு பதிலடி: இப்படி இருக்கையில் நடிகர் விஜய் வேலூரில் பேசுகையில் தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, என் மேல் என்னென்ன அவதூறுகள் பரப்புகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புவதை போன்றது. எனக்கு அரசியல் தெரியவில்லை என்று சொன்னால் அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வதைப் போன்றது. என்னை அசிங்க அசிங்கமாக பேசினால் அது மக்களை அசிங்க அசிங்கமாக பேசுவதைப் போன்றது. எனக்கு எதிராக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்யப்படும் செயல் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
கண்ணீர்: இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை. இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் போல, உடலும் உயிரும் போல. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது. சென்சிட்டிவான செண்டிமெண்ட் அது" என்று கத்தி பேசினார். விஜய் இவ்வாறு பேசியதும் மேடையிலேயே சில வினாடிகள் அமைதியாக நடந்தார். அதேபோல் மிகவும் எமோஷனலும் ஆகி, கண் கலங்கினார். விஜய் இவ்வளவு ஆவேசமாக பேசி, எமோஷனல் ஆவது அவரது கட்சி மேடையில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











