Thalapathy 69: தளபதி விஜய்யின் கடைசி படம்.. டைட்டில் இதுவா? விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு!

சென்னை: நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தனது அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகப்போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பில், தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். அதன்படி அவரது 69வது படம்தான், நடிகராக அவரது கடைசி படமாக உள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் குறித்து திரை உலகில் சில தகவல்கள் உலா வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

உங்கள் விஜய்-யில் ஆரம்பித்து, இளைய தளபதி விஜய், தளபதி விஜய் என தமிழ் சினிமாவில் தான் கால் பதித்த நாளில் இருந்து, கடினமான உழைப்பினைச் செலுத்தி படிப்படியாக வளர்ந்து நிற்கின்றார் விஜய். இவர் இன்றைக்கு கோடிக்கணக்கான ரசிகர்களுக்குப் பிடித்த அபிமான நடிகராக உள்ளார். பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக இன்றைக்கு டாப்பில் உள்ள நடிகராக விளங்குகின்றார். இவரது படம் ரிலீஸ் ஆகின்றது என்றால், அந்தப் படம் விமர்சன ரீதியாக தோல்விப் படம் என்றாலும் வசூலில் தயாரிப்பாளருக்கு வெற்றிப் படமாக மாற்றிக் கொடுக்கும் அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

thalapathy 69 vijay 69

திரையுலகில் இப்படியான கரீஷ்மாவைக் கொண்டுள்ள விஜய், தனது அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் தான் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அப்படி இருக்கும்போது, இவரது கடைசி படமாக தளபதி 69 படம் உள்ளது. இந்தப் படத்தினை கே.வி. என் புரெடக்‌ஷன்ஸ் தயாரிக்கின்றது. மேலும் இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்குகின்றார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிகின்றார். படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடிகின்றார்கள். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தளபதி 69: இப்படியான நிலையில், தற்போது தளபதி 69 என்ற பெயரில் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், படத்தின் டைட்டில் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வேகமாக பரவி வருகின்றது. அதாவது, விஜய்யின் 69வது படத்திற்கு நாளைய தீர்ப்பு என பெயர் சூட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் பெயரைச் சூட்ட முக்கியமான சில காரணங்களும் உள்ளது எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

thalapathy 69 vijay 69

டைட்டில்: அதாவது, நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எனவே ரசிகர்களை ஒரு நாஸ்டாலிஜிக் உணர்வினை ஏற்படுத்த இந்தத் தலைப்பு சரியாக இருக்கும் என படக்குழு எண்ணுகின்றது எனவும் கூறப்படுகின்றது. தற்போது விஜய் நடித்து வரும் படத்தின் கதைக்களம் அரசியல் தளத்தினை மையப்படுத்தி உள்ளது எனக் கூறப்படுகின்றது. மேலும் விஜய்யும் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கியுள்ளதால், இந்தத் தலைப்பு சரியாக இருக்கும் எனவும் யோசித்து படக்குழு இந்தத் தலைப்பினை முடிவு செய்துள்ளதாம்.

thalapathy 69 vijay 69

அப்டேட்: மேலும் இந்தத் தலைப்பினை விஜய்யின் பிறந்த நாளில் அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக படம் குறித்த அப்டேட்டுகள் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தத் தலைப்பு விஜய்க்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

thalapathy 69 vijay 69

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X