உங்க வீட்டில் இருக்கும் பெண்ணை மதியுங்கள்.. விஜய்க்கு பொன்ராஜ் பதிலடி .. பஞ்சாயத்து பத்திக்கிச்சு

சென்னை: அரசியல் விமர்சகர் பொன்ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய்யின் ரசிகைகள் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் பேசிய பேச்சுக்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இவரது கருத்து மிகவும் காட்டமாக இருந்ததால் அதற்கு தவெக தரப்பில் நடிகர் விஜய்யே கண்டித்து பதிவிட்டார். விஜய் கண்டனத்திற்கு பொன்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பெரும் கண்டனத்தை பதிவிட்டதுடன், முதலில் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் விஜய் என்று பெரிய பட்டியலையே பகிர்ந்துள்ளார்.

பொன்ராஜின் பதிவில், " நடிகர் விஜய் அவர்களே! ஆதாய‌ சூதாடி‌ நீங்களா? நானா? உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து :

1) அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா?

2) எனக்கு என்‌புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல், ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌ சூதாடியா, நானா?

3) குப்பை கூட்டிடுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசி பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே - அதை கூட ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌சூதாடியா, நானா?

TVK Vijay vs Ponraj War of Words Escalates Over Women Remarks

4) உங்களை அரசியல் ரீதியாக நான்‌ செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இறுக்கிறது என்று திமுக போபியா பிடித்து, எதைச் சொன்னால் பித்தம் தெளியும் என்று அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?

5) இன்று காலையில் இருந்து இப்போதுவரை நூற்றூக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வளைத்தளத்தில், வாட்ஸ்ஆப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு‌ இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள்.

வீட்டு பெண்களை மோசமாக நடத்துபவனல்ல: அரசியலில் நான்‌கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை‌ என்றால் இப்படியா வசை பாடுவது.‌ நான்‌ பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சிலர் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக இருந்தாலும், I will call spade as spade.

மன்னிப்பு: எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.‌ உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இளைக்கப்படும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.‌

TVK Vijay vs Ponraj War of Words Escalates Over Women Remarks

அவதூறு: உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாம் கேட்ட உங்க கட்சி கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதிற்கு மன்னிப்பு கேளுங்கள்.‌ இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.‌ மீண்டும் சொல்கிறேன், நான்‌ எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன்.‌ எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.‌ வெ.‌பொன்ராஜ் " என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், இவரது பதிவுக்கும் விஜய் ரசிகர்கள் மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X