Vijay: விஜய் ஆட்சிக்கு வரமாட்டார்... எல்லாத்துக்கும் சப்போர்ட் செய்தவரே இப்படி சொல்லிட்டாரே

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் களமிறங்கி தேர்தலை எதிர் கொள்ளவுள்ளார். நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமானது அரசியல் தளத்தில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற பேச்சுக்கள் அரசியல் தளத்தில் அடிபட்டது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியினர் நடவடிக்கை தேர்தல் நேரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த பிரபலம் ஒருவர் தற்போது, விஜய் ஆட்சிக்கு வர மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நடிகர் விஜய் வாராவாரம் மக்களைச் சந்தித்து வந்த நிலையில் கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவம் அதன் பின்னர் அவரது நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. என்னதான் காரணம் சொன்னாலும் விஜய் தன்னை நியாயப்படுத்துவதை மக்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதாவது கரூர் சம்பவம் குறித்து தவெகவினர் ஏற்கனவே தெரிவித்து வருவது போல திமுகதான் காரணம் என்றாலும், களத்தில் தவெக இருந்து மக்களை மீட்டு இருக்க வேண்டும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

TVK Vijay Won t Come to Power Former Supporter Valai Pechu Anthanan Shocking Statement

அதிருப்தி: அதன் பின்னர் திமுகவின் திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து போன்றவற்றை தவெக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அத்திட்டங்களை விரிவு படுத்துவதாக தவெக அறிவித்துள்ளது தவெகவினர் மத்தியிலேயே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. மேலும் விஜய் மனைவி சங்கீதா, நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளது பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியது.

விஜய் ஆட்சியைப் பிடிக்க மாட்டார்: இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்த ஒருவாரத்திற்குள் நடிகை த்ரிஷாவுடன் விஜய் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றதும் பெரும் அதிருப்தியை கொடுத்தது. விஜய்யின் இந்த செயலை தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இது மட்டுமல்லாமல் விஜய்யை காட்டமாக விமர்சிக்கத் தொடங்கினர். சங்கீதாவின் விவாகரத்து மனு வரை விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த வலைபேச்சு அந்தணன், த்ரிஷாவை அழைத்துக் கொண்டு விஜய் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் சினிமா செய்திகளை கொடுக்கும் போது, விஜய் எப்படியும் ஆட்சியை பிடிக்க மாட்டார் என்று அந்தணன் தெரிவித்தார். அவரது இந்த கருத்து விஜய் ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X