யார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்
Recommended Video

சென்னை: இது தான் உங்க டக்கா சார் என்று தூத்துக்குடி விவகாரம் பற்றி ட்வீட்டிய சிவகார்த்திகேயனிடம் மக்கள் கேட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து சிவகார்த்திகேயன் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்..அன்பை போதித்த மண்ணில் இழக்கும் ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது...என்று சிவகார்த்திகேயன் நேற்று ட்வீட்டினார்.
கலாய்
செவ்வாய்க்கிழமை மதியம் நடந்த சம்பவத்திற்கு சிவகார்த்திகேயன் நேற்று தான் ட்வீட்டியதை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப சீக்கிரமாக அஞ்சலி செலுத்திட்டீங்களே என்று கேட்டுள்ளனர்.

தனுஷ்
இது தான் உங்க டக்கா என்று லேட்டாக கண்டனம் தெரிவித்த தனுஷை கலாய்த்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்ததும் இவருக்கு அவர் பரவாயில்லை போலயே என்கிறார்கள்.
முக்கியம்
தமிழகத்தில் என்ன நடந்தால் என்ன உங்களுக்கு உங்கள் பட ஷூட்டிங் தானே முக்கியம் என்று நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











