ஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest
Recommended Video

சென்னை: ஏ.பி.டி. வில்லியர்ஸ் பற்றி ட்வீட் போட்டு தமிழக மக்களிடம் மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று இரவு போலீசார் வீடு, வீடாக சென்று சிறுவர்களை கூட விட்டு வைக்காமல் வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.
பதட்டம்
தூத்துக்குடியே பதட்டமாக உள்ள நிலையில் ஆர்.ஜே. பாலாஜியோ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஏ.பி.டி. வில்லியர்ஸ் பற்றி ட்வீட்டியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி
இங்கு தூத்துக்குடியே பத்திக்கிட்டு எரிகிறது உங்களுக்கு கிரிக்கெட், ஐபிஎல் தான் முக்கியமா, நீங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறீர்களா என்று நெட்டிசன்கள் பாலாஜியை விளாசியுள்ளனர்.
கேவலம்
மாநிலத்தில் நடக்கும் பிரச்சனை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் உங்களின் படங்களை பார்த்து ரசித்ததை நினைத்தால் கேவலமாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
தென்னாப்பிரிக்கா
பேசாமல் ஏபிடி வில்லியர்ஸின் நாடான தென்னாப்பிரிக்காவுக்கே போயிடுங்க. திரும்பி வந்துவிடாதீர்கள் என்று பாலாஜியை வெளுத்து வாங்கியுள்ளனர்.
நீங்க தான்
கலகக்காரர்கள் வந்ததால் தான் தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார். இந்நிலையில் அந்த கலக பார்ட்டியே நீங்கள் தான் என்று மக்கள் அவரை திட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











