ட்விட்டரை தெறிக்க விடும் பாரத்: ஆனால் 'தோனி அன்ட் கோ'வால் நாளை பாதிப்பு ஏற்படுமா?
மும்பை: சல்மான் கானின் பாரத் படம் நாளை ரிலீஸாவதையொட்டி ட்விட்டரில் அது பற்றித் தான் பாலிவுட் ரசிகர்கள் பேசி டிரெண்டாக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ள பாரத் படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா தான் சல்மான் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் நிக் ஜோனஸை திருமணம் செய்ய விரும்பி அவர் பாரத் படத்தில் இருந்து வெளியேறினார்.

ப்ரியங்கா வெளியேறிய பிறகு சல்மான் கானுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பாரத் பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ஆகும்.
ரம்ஜான் பண்டிகை சல்மான் கானுக்கு ராசியான நாள். ரம்ஜான் அன்று வெளியாகும் அவரின் படங்களில் வசூலை அள்ளிக் குவிக்கும். 2009ம் ஆண்டு வாண்டட் படம் ரம்ஜான் அன்று ரிலீஸாகி சூப்பட் டூப்பர் ஹிட்டானது. அதில் இருந்து தனது படங்களை ரம்ஜான் அன்று ரிலீஸ் செய்து வருகிறார் சல்மான் கான்.
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் சுல்தான் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படம் ரிலீஸான அன்று ரூ. 36.54 கோடியும், மூன்று நாட்களில் ரூ. 105.53 கோடியும் வசூலித்தது. ரம்ஜான் பண்டிகை நாளில் வெளியான சல்மான் படங்களில் சுல்தான் தான் மிகப் பெரிய ஓபனிங் பெற்ற படம் ஆகும்.
சுல்தானை போன்றே பாரத் படமும் புதன்கிழமை ரிலீஸாகிறது. சுல்தான் படைத்த சாதனையை பாரத் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாரத் படத்திற்கு ஒரு சின்ன பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.
போட்டி மதியம் 3 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடக்கும். நம் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் பாரத் படத்தின் வசூல் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. அலி அப்பாஸ் ஜாபர், சல்மான் சேர்ந்து பணியாற்றிய சுல்தான், டைகர் ஜிந்தா ஹை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அதனால் அவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள பாரத்தும் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











