»   »  உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்குனா தக்காளி சட்னியா: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்குனா தக்காளி சட்னியா: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாவனாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட நடிகர் விவேக்கை நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கிறார்கள்.

நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்டதை கண்டித்ததுடன் அவருக்கு ஆதரவாக திரையுலகினர் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாவனாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றங்களுக்கு எது வழி வகுக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.

குற்றங்கள்

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன்,இது போன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது! நாங்கள் உங்களுக்கு ஆதரவு பாவனா என விவேக் ட்வீட்டியுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் விவேக்கை வறுத்தெடுத்துள்ளனர்.

குழந்தை

பாவனாவிற்கு நடந்தது 3 வயது குழந்தைக்கு நடந்ததை விட பெரிதா??

@Actor_Vivek

நண்பன்

@Actor_Vivek நண்பனை மாமாவாக்கி பிச்சைக்காரியை ரூமுக்கு கூட்டிட்டு வர வைச்சு பண்றதெல்லாம் வக்கிரத்துல வராதுங்களா ஐயா - ஜக்கி வாசுதேவ்

ஹர்ஷினி

ஹர்ஷினிக்கும் ரித்திகாவுக்கும் திரையுலகத்தினர் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க அவர்கள் என்ன சாராவா.. நைனிக்காவா..?

நந்தினி

@Actor_Vivek அப்போ நந்தினி ஹர்ஷினி இன்னும் ௭வ்வளவோ சாதரண பெண்மணிகள் இருக்காங்க ஏ அவங்க பக்கம் யாரும் பேச மாட்ரீங்க

கேரளா

@Actor_Vivek ஐயா நீஙக கேரளாவல இருக்கிங்களா இல்ல தமிழ்நாட்லயா இங்க மாசம் ஒரு குழந்தைங்கள கொல்ரானுங்க இதலாம் கேட்க மாட்டீங்க

பிரபலங்கள்

@Actor_Vivek பாவனா போன்ற பிரபலங்களைக்கு நீங்கள் இருக்கிறீர்கள், நீதி கிடைக்காமல் போன நம் ஊர் ஏழை பெண்களுக்கு யார் இருக்கிறார்கள் 😢😢😢

விவேக் சார்

@Actor_Vivek ஹர்சினியும் நந்தினியும் கூட பெண்கள் தான் அப்ப எங்க போனிங்க விவேக் சார்

ரத்தம்

@Actor_Vivek உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா....

திருந்தட்டும்

@Actor_Vivek ரட்டை அர்த்த வசனத்த அதிகமா பேசும் நீங்களும்
பெண்களை போதை பொருலாக சித்தரிக்கும் தாங்கள் சார்ந்த சினிமாவும் முதலில் திருந்தட்டும்

English summary
Tweeples troll and criticise actor Vivekh who tweeted in suport of actress Bhavana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil