»   »  பீஃப் பற்றி ட்வீட்டா போடுறீங்க ட்வீட்டு: அப்பாவை கண்டித்த ரன்பிர் கபூர்

பீஃப் பற்றி ட்வீட்டா போடுறீங்க ட்வீட்டு: அப்பாவை கண்டித்த ரன்பிர் கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாட்டு இறைச்சிக்கு மகாராஷ்டிராவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது பற்றி ட்வீட் போட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளார் ரன்பீர் கபூரின் தந்தையும், நடிகருமான ரிஷி கபூர்.

ஒரு காலத்தில் பல பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர். நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை. மகாராஷ்டிரா மாநில அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளதை எதிர்த்து ட்விட்டரில் குரல் கொடுத்துள்ளார்.

அவர் போட்ட ட்வீட் அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

மதம்

நான் கோபமாக உள்ளேன். உணவை ஏன் மதத்துடன் ஒப்பிடுகிறீர்கள்? நான் மாட்டு இறைச்சி சாப்பிடும் இந்து. அதனால் மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில் என் பக்தி குறைவு என்று அர்த்தமா? சிந்தியுங்கள் என்று ரிஷி கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திட்டு

ரிஷி கபூரின் ட்வீட்டை பார்த்த சிலர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பலர் அவரை திட்டித் தீர்த்துவிட்டனர். அவரோடு சேர்த்து அவரது குடும்பத்தையும் திட்டியுள்ளனர்.

அரசியல்

அரசியல்

தயவு செய்து யாரும் என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் விலங்குகளை கொல்லச் சொல்லவில்லை. அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்திற்கு நான் நான் எதிரானவன் என்று ரிஷி மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

ரன்பிர்

ரன்பிர்

ட்வீட் போட்டு அப்பா பிரச்சனையில் சிக்கியதை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறாராம் ரன்பிர் கபூர்.

English summary
Ranbir Kapoor's dad cum actor Rishi Kapoor tweeted about beef ban and got scolded by many.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil