ஆச்சரியமாயில்ல... ஒரே வருஷத்துல இத்தனை படமா? ரஜினி பற்றி வியக்கும் தயாரிப்பாளர்

By

Recommended Video

புள்ளிங்கோ கானா - SUPERSTAR RAJINI BIRTHDAY SPECIAL | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: ஒரே வருடத்தில் 21 படங்களில் நடித்த ஹீரோ ரஜினிகாந்த் ஒருவராகத்தான் இருப்பார் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் சொன்னார்.

ரஜினிக்கு இன்று 70 வது பிறந்த நாள். ஆடம்பரக் கொண்டாட்டம் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், அவர் வேண்டுகோளின் படி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்த தானம், அன்னதானம் என கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆகியோரின் வாழ்த்து மழைகளில் திக்கு முக்காடுகிறது, சமூக வலைத்தளங்கள்.
இந்த நேரத்தில் ரஜினியின் சிறப்புகள் பற்றிச் சொன்னார், தயாரிப்பாளர் தனஞ்செயன்.

நெகட்டிவ் வேடம்

நெகட்டிவ் வேடம்

'ஒரு வருஷத்துல 21 படம் நடிச்ச ஒரே ஹீரோ, நம்ம ரஜினிகாந்த் தான். அவர் 1975 ஆம் வருஷம் 'அபூர்வ ராகங்கள்' படத்துல நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர்ல அறிமுகமானார். பிறகு தொடர்ந்து 2 வருஷம் பலதரப்பட்ட கேரக்டர்கள்ல நடிச்சார்.

ஹீரோ

ஹீரோ

1978 ஆம் வருஷம் பைரவி மூலமா ஹீரோவானார். அதுக்குப் பிறகு அவர் கேரியர், டாப்ல போக ஆரம்பிச்சது.

21 படம்

21 படம்

1975 ஆம் வருஷம் ஒரே ஒரு படம்தான் பண்ணினார். 1976 ஆம் வருஷம் நாலு படம். 1977 ஆம் வருஷமே பாபுலரான நடிகரா மாறி, தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 15 படங்கள் நடிச்சார். 1978 ஆம் வருஷம் பார்த்தீங்கன்னா 21 படம் பண்ணியிருக்கார். ஒரு வருஷத்துல 21 படம் அப்படின்னா, சாதாரண விஷயமில்லை.

உழைப்பு

உழைப்பு

ராத்திரி, பகலா உழைச்சாதான் இதெல்லாம் முடியும். எனக்குத் தெரிஞ்சு வேற எந்த நடிகரும் இத்தனை படங்கள்ல, ஒரே வருஷத்துல நடிச்சிருப்பாங்களான்னு தெரியல.

100 வது படம்

100 வது படம்

1975 ஆம் வருஷம் நடிகரா அறிமுகமான ரஜினி, 85 வருஷமே 100 வது படம் பண்றார். பத்து வருஷத்துல நூறு படம் அப்படிங்கறதையும் எந்த நடிகரும் தொடலை. இதுதான் ரஜினியின் உழைப்பு.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவுல இதுவரை மூணு நடிகர்களை, சூப்பர் ஸ்டார்னு சொல்லியிருக்காங்க. ஒருவர், தியாகராஜ பாகவதர், அடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அடுத்து ரஜினிகாந்த். 40 வருஷம் கடந்த பிறகும் சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்படற ஒரே நடிகரும் அவர்தான் என்கிறார் தனஞ்செயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X