ட்விட்டர் பக்கத்தில் ஏற்படும் அடுத்தடுத்த மாற்றங்கள்.. முடக்கப்பட்ட பயனாளியின் கணக்கு!

சென்னை : ட்விட்டர் பக்கத்தின்மூலம் அதிகமான மக்கள், அதிகமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு படம் வெளிவந்தால் முதலில் ட்விட்டர் மூலம் என்ன மாதிரியான விமர்சனங்கள் வெளியாகின்றன என்பதை கொண்டே அந்த படத்திற்கான வரவேற்பு வெளியாகும்.

அந்த வகையில் ட்விட்டரில் அதிகமான வீடியோக்களையும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் வெளியிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் விமர்சனங்கள்

ட்விட்டரில் விமர்சனங்கள்

அதிகப்படியான கஷ்டங்களுக்கு இடையில் ஒரு படம் உருவாகிறது. ஆனால் அவை குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் விமர்சகர்கள், ரசிகர்கள் கமெண்ட் செய்துவிட்டு போகின்றன. சமூக வலைதளப் பக்கங்கள் அதிகமான பயன்பாட்டில் உள்ள நிலையில், இது மிக சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இவற்றிலும் குறிப்பாக ட்விட்டர் பக்கங்களில் அதிகமான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தெளிவான மனநிலை

தெளிவான மனநிலை

ஒரு திரைப்படத்தின் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்துவது ட்விட்டர் பக்கங்கள் அதிகமான சாத்தியத்தை கொண்டுள்ள நிலையில், அந்த வீடியோக்களை பதிவிட்டு அந்த படம் குறித்தும் குறிப்பிட்ட வீடியோ குறித்தும் விமர்சனங்களை முன்வைப்பது சாத்தியமாக உள்ளது. இதனால் ஒரு படம் குறித்து உடனடியாக ரசிகர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டு படத்தை பார்ப்பதா வேண்டாமா என்பது குறித்தும் அவர்கள் உணர முடிகிறது.

காபிரைட் பிரச்சினைகள்

காபிரைட் பிரச்சினைகள்

இதனால் படத்தை தயாரிப்பவர்களுக்கு அதிகமான நஷ்டம் ஏற்படுகிறது. படம் குறித்து உடனடியாக விமர்சனங்களை செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தலைமையின்கீழ் ட்விட்டர் பக்கத்தில் பல மாற்றங்கள் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. பேஸ்புக்கை போலவே காபி ரைட் குறித்த பல விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள்

ட்விட்டரில் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள்

வீடியோக்களை பதிவிடுவதில் ட்விட்டர் பக்கத்தில் அதிகமான கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், அத்தகைய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக ட்விட்டர் தளம் குறிப்பிட்டு வருகிறது. 40 நிமிடங்களுக்கு வீடியோக்களை பதிவிடுவது குறித்தும் தெளிவை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு

முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு

இதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தற்போது வெளிநாட்டு படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 50 ட்வீட்களாக 2 நிமிட இடைவெளிகளில் பதிவிட்டுள்ள நபரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. தி பாஸ்ட் அண்ட் தி ப்யூரியஸ் : டோக்கியோ ட்ரிப்ட் படம் இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட நிலையில், இந்தப் படம் ட்விட்டரில் வைரலானது.

முறைப்படுத்தப்படும் ட்விட்டர்

முறைப்படுத்தப்படும் ட்விட்டர்

தொடர்ந்து அவதார், ஹேக்கர்ஸ் போன்ற படங்களும் இதேபோல பதிவிடப்பட்டுள்ளன. இதே முறையில் பலரும் முயற்சித்த நிலையில், அவர்களது பக்கங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து எலான் மஸ்க்கின் கீழ் ட்விட்டரின் பல விஷயங்களை செம்மையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக காப்பி ரைட் விஷயங்களில் முறையான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X