Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சீனு ராமசாமி!
சென்னை: வார வாரம் ரிலீசாகும் படங்களை விமர்சித்து அந்த படங்களின் இயக்குநர்களுடன் சண்டை போடுவதே ப்ளூ சட்டை மாறனுக்கு வேலையாக மாறிவிட்டது.
போன வாரம் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தை விமர்சித்தது மட்டுமின்றி மோசமான ரீமேக், இந்தி படத்தையே கெடுத்து வைத்து விட்டார் என ஆர்ஜே பாலாஜியை வம்பிழுக்க ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்திருந்தார் ஆர்ஜே பாலாஜி.
இந்நிலையில், தற்போது மாமனிதன் படத்தில் வரும் ஒரு காட்சியை லாஜிக் ஓட்டை என விமர்சித்த நிலையில், ப்ளூ சட்டை மாறனுக்கும் இயக்குநர் சீனு ராமசாமிக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
பப்ளிசிட்டி பிடிக்காது..ஆனா வருடம் 365 நாளும் போட்டோ போடுவாராம்..அஜித்தை சீண்டும் ப்ளூசட்டை மாறன்

நெகட்டிவ் விமர்சனம்
தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் புதிய படங்களுக்கு விமர்சனம் சொல்லி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என படத்தில் உள்ள நல்லது மற்றும் கெட்டதை எடுத்துச் சொல்லாமல், அதிகப்படியாக 2 நிமிடத்துக்கும் குறைவாக நெகட்டிவ் விமர்சனங்களையே அடுக்கி நெட்டிசன்கள் மத்தியில் பாப்புலர் ஆகி விட்டார். கோலிவுட்டில் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் அடிக்கடி இவர் சண்டை போட்டு வருகிறார்.

வம்பிழுக்கும் வகையில்
சினிமா விமர்சனத்தையே ட்ரோலாக சொல்லி வரும் ப்ளூ சட்டை மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பற்றியும் அவர்கள் நடித்த படங்கள் பற்றியும் ட்ரோல் செய்து ட்வீட் போட்டு வருகிறார். நடிகர் அஜித்தின் ஐரோப்பா சுற்றுலா படங்கள் வெளியானது கூட சினிமா பப்ளிசிட்டி என சமீபத்தில் விமர்சித்து அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

போன வாரம் பாலாஜி உடன்
வீட்ல விசேஷம் படம் கடந்த வாரம் வெளியான நிலையில், அந்த படத்தை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜியை வம்பிழுத்து அவருடனும் ட்விட்டர் சண்டை போட்டார். பதிலுக்கு, என் படம் நல்லா தான் தியேட்டர்களில் ஓடுது, எங்களூக்கு தேவையான லாபம் கிடைத்திருக்கிறது என வீடியோ ஒன்றை போட்டு தக்க பதிலடி கொடுத்தார். இந்நிலையில், இந்த வாரம் மாமனிதன் பட இயக்குநர் சீனு ராமசாமி உடன் மல்லுக்கட்டி வருகிறார்.

மாமனிதனை கொல்ல முடியாது
"இனிய மாறா
வணக்கம்
உங்கள்
விமர்சனத்திற்கு எனதன்பு
நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார்
வாங்க தனியா போகலாம் இல்லையா?
மனிதனை கொல்லலாம்
மாமனிதனை
உங்களால் கொல்ல முடியாது
tamiltalkies
நன்றி..." என பதிவிட்டு விஜய்சேதுபதி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டவரை டேக் செய்துள்ளார் சீனு ராமசாமி.

சீனு ராமசாமி vs மாறன்
"பண்புள்ள சீனா... இனிய வணக்கம்.
மாமனிதனை இம்மண்னின் மனிதர்கள் கொண்டாடுகிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்களா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.
அன்பிற்கு நன்றி.
குறிப்பு: தனிப்பட்ட மடலில் யாரையும் Tag செய்து துணைக்கு அழைப்பதில்லை. " என வார்த்தைப் போர் செய்துள்ளார்.

எதிர்ப்பும் ஆதரவும்
ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை எல்லாம் பார்க்காதீங்க, அவரை ஒரு ஆளாகவே மதிக்காதீங்க என சீனு ராமசாமிக்கு சில ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு கீழ் பல ரசிகர்கள் அவரை திட்டியும், சிலர் அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது என சிலர் அவருக்கு ஆதரவும் அளித்துள்ளனர். அடுத்த வாரம் யாருடன் ப்ளூ சட்டை மாறன் சண்டை போட போகிறாரோ தெரியவில்லை என சிலர் புலம்பி வருகின்றனர்.
-
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..நயன் – விக்கி ஜோடியின் மாஸ்டர் பிளான்.. அப்போ ஹனிமூன் இல்லையா?
-
“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி
-
லோகேஷ் யுனிவர்ஸ் மாதிரி இப்ப கெளதம் யுனிவர்ஸ்: இங்கேயும் கமல் தான் வேட்டையாடி விளையாடப் போறாராம்!