ரஜினிகாந்தின் முதல் ட்வீட் என்ன?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்ததும் சேர்ந்தார் அதில் அவரைப் பற்றிய ஜோக்குகள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ட்விட்டரில் சேர்ந்துள்ளார். சும்மாவே ரஜினிகாந்தை வைத்து இணையதளங்களில் எண்ணற்ற ஜோக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் ட்விட்டரில் சேர்ந்த தகவல் அறிந்ததும் ஆளாளுக்கு குஷியாக ஜோக்குகள் போட ஆரம்பித்துவிட்டனர்.
நீங்கள் சிரிக்க இதோ சில ஜோக்குகள்,

ட்விட்டர்
ரஜினி ட்விட்டரில் சேர்ந்துவிட்டார். அவர் சேர்ந்த 20 நிமிடத்தில் ட்விட்டர் இந்தியா கணக்கை அங்கீகரித்துவிட்டார். ஹா ஹா மைன்ட் இட். ஆப் கி பார் ரஜினி சர்கார் என்று பிரபலமான பத்திரிக்கையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தலைவர்
தலைவர் சூப்பர்ஸ்டார் ட்விட்டரில் சேர்ந்ததன் மூலம் அதை ஆசிர்வதித்துள்ளார் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

ட்வீட்கள்
ரஜினிகாந்த் சில நொடிகளில் 1000 முறை ட்வீட் செய்து அதை அடுத்த சில நொடிகளில் டிலீட் செய்துவிடுவார் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

8 வருஷம்
ட்விட்டர் தனக்கு ரஜினிகாந்தால் அங்கீகாரம் கிடைக்க சுமார் 8 ஆண்டுகள் காத்திருந்தது. இப்போதான் ஹேப்பி அண்ணாச்சி என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்
ரஜினிகாந்தால் மட்டும் தான் ஃபேஸ்புக் மூலம் ரீட்வீட் செய்ய முடியும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

கணக்கு
ரஜினி ட்விட்டரில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே அவரது கணக்கை ட்விட்டர் நிர்வாகம் வெரிஃபை அதாவது அங்கீகரித்துள்ளது.

படம்
ரஜினி தனது ட்விட்டர் கணக்கில் முதலில் தான் நடித்த சிவாஜி படத்தின் போட்டோவை வைத்திருந்தார். ஆனால் சில நிமிடங்களில் அதை மாற்றி மேக்கப் இன்றி இருக்கும் ஒரு போட்டோவை போட்டுள்ளார்.
முதல் ட்வீட்
3. 58 மணிக்கு ரஜினி முதன்முதலாக ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட் இதோ, கடவுளுக்கு நன்றி, வணக்கம் அனைவருக்கும்!! என் ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய நன்றி. இந்த டிஜிட்டல் பயணம் மகிழ்ச்சியாக உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார். இத்துடன் அவர் ட்விட்டரில் இணைந்ததை அறிவிக்கும் வீடியோவின் லிங்கை போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











