விஜய்.. ஒவ்வொரு ஃப்ரேமும் வெறித்தனம்.. தியேட்டர்ல பிகில் சத்தம் தெறிக்க போகுது!
சென்னை: பிகில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திக்குமுக்காடி வருகிறது டிவிட்டர் தளம்.
பிகில் படத்தின் ட்ரெயிலர் பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு இன்று மாலை வெளியானது. படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டார்.
படத்தின் ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என காலை முதலே ஒவ்வொரு நிமிஷமாக காத்திருந்தனர் விஜய் ரசிகர்கள். பிகில் ட்ரெயிலர் என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது.

திக்குமுக்காடுகிறது
இந்நிலையில் பிகில் ட்ரெயிலர் கண்டு ரசித்த ரசிகர்கள், தங்களுக்கு தோன்றிய வார்த்தைகளால் வெறித்தனமாக வர்ணித்து வருகின்றனர். விஜயின் ரசிகர்கள் பிகில் ட்ரெயிலர் குறித்து கூறும் கருத்துக்களால் டிவிட்டர் தலம் திக்குமுக்காடி வருகிறது.
வேற லெவல்
இது தான் தளபதியின் வெறித்தனம்.. வேற லெவல் தலைவா என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
ஃபுல் மாஸ்
ஒரு ரசிகனா தளபதிய எப்படி எல்லாம் பாக்கனும்னு ஆசை படுறமோ அந்த மாதிரி ஃபுல் மாஸா இருக்கறாப்ல.. நன்றி அட்லி சார்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
தரம்டா..
அடேய் புள்ளிங்களா.. ஏஆர்ஆர் பிஜிம்! தரம் டா
விஷுவல்லாம் வாய் அடைச்சு போய்ட்டேன்.. கண்டிப்பா பிளாக்பஸ்டர்தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
தெறிக்கப் போகுது
தலைவா.. விஜய்.. ஒவ்வொரு ஃப்ரேமும் ப்யூர்.. வெறித்தனம்..
தியேட்டர்ல பிகில் சத்தம் தெறிக்க போகுது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சத்தியமா வெறித்தனம்
எங்களுக்கு ரெக்கார்டுலாம் தெரியாது.. ஆனா சத்தியமா ட்ரெயிலர் வெறித்தனம்! என்று கூறுகிறார் இவர்.
புட் பால் சீன்ஸ்
பைட் சீன்ஸ்.. டயலாக்.. புட் பால் சீன்ஸ்.. பிஜிஎம் எல்லாம் பாக்குற முன்னாடியே வெறித்தனமா இருக்கு.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











