தனுசு ராசி நேயர்களே படம் எப்படி இருக்கு.. டிவிட்டர் ரியாக்ஷன் பாருங்க மக்களே!
சென்னை: தனுசு ராசி நேயர்களே படம் நேற்று வெளியான நிலையில் படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் ஹரீஷ் கல்யாண். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ரைஸா வில்சனுக்கும் இவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கையோடு இருவரும் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார் ஹரீஷ் கல்யாண்.

தனுசு ராசி நேயர்களே..
இதுவரை காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே நடித்துள்ளார் ஹரீஷ் கல்யாண். இந்நிலையில் சஞ்சய் பாரதி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் தனுசு ராசி நேயர்களே.

டிவிட்டர் விமர்சனங்கள்
ரெபா மோனிகா ஜான், திகங்கனா, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற படங்களுடன்..
அதன்படி தனுசு ராசி நேயர்களே படத்தில் ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை என தெரிவித்து இருக்கின்றனர் நெட்டிசன்கள். இருப்பினும் மற்ற மூன்று படங்களை காட்டிலும் தனுசு ராசி நேயர்களே படம் சற்று பின்தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பாடல்கள் அருமை
தனுசு ராசி நேயர்களே அழகான படம்.. எப்போதும் போல ஹரீஷ் கல்யாண் அசத்தியிருக்கிங்க.. பாடல்கள் அருமை.. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என கூறியிருக்கிறார் இவர்.
ஐ அம் வெய்ட்டிங்
ஹரீஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே சூப்பர் நகைச்சுவை மற்றும் கும்பத்திற்காக பண்ணியிருக்கீங்க.. அடுத்து ஒரு காதல் படம் பண்ணுங்க.. பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மாதிரி படங்கள் பண்ணுங்க.. ஐஅம் வெய்ட்டிங் என்கிறார் இந்த ரசிகர்.
வேற என்ன வேணும்?
ஹரீஷ் அண்ணா செம படம்.. செம என்டர்டெய்ன்மென்ட்.. செம ஆக்டிங் மற்றும் செம ஸ்டைல்.. வேற என்ன வேணும்.. மொத்தமா சூப்பர் படம் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











