twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "காகித கொக்குகள் செய்வோம்" இந்த ஆண்டின் மிகச்சிறந்த படைப்பு.. வாழ்த்து மழையில் குண்டு!

    |

    Recommended Video

    KAYAL ANANDHI INTERVIEW | GUNDU MOVIE | V-CONNECT | FILMIBEAT TAMIL

    சென்னை: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

    தமிழ் சினிமாவில் நேற்று 4 படங்கள் ரிலீஸ் ஆனது. இருட்டு, ஜடா, தனுசு ராசி நேயர்களே மற்றும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆயின.

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தை மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.

    தயாரிப்பு

    தயாரிப்பு

    பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்த கையோடு இயக்குநர் பா.ரஞ்சித்துதான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். அட்டக்கத்தி தினேஷ், கயல் ஆனந்தி, ரித்திவிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பாஸிட்டிவ் விமர்சனங்கள்

    பாஸிட்டிவ் விமர்சனங்கள்

    படம் நேற்று ரிலீஸான நிலையில் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரிலும் பாராட்டி வருகின்றனர்.

    முத்தங்கள் ஆயிரம்

    வாழ்த்துக்கள் கூற வேறு வார்த்தைகள் இல்லை குண்டு குழுவினருக்கு முத்தங்கள் ஆயிரம்.. என தெரிவித்திருக்கிறார் இவர்.

    சிறந்த நடிகருக்கான விருது

    இந்த வருடத்தின் மிக சிறந்த படைப்பு குண்டு சிறந்த நடிகருக்கான விருது காத்துகொண்டு இருக்கிறது...! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    பேசி தீர்க்கனும்

    எதுவா இருந்தாலும் ஆயுதம் மட்டும் எடுக்கக்கூடாது.. பேசி தீர்க்கனும்.. அந்த கடைசி வசனம் கேட்டுக்கிட்டே இருக்கு. இப்படியொருப்படம் தந்த பா.ரஞ்சித் மற்றும் ஆதிரை ஆதியன் அவர்களுக்கும் நன்றி என்று கூறுகிறார் இவர்.

    பேராயுதம்

    #காகித_கொக்கு செய்கிற ஒவ்வொரு கைகளும் போருக்கு எதிரான பேராயுதத்தை செய்கின்றன.. என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

    வாழ்த்துக்கள்

    குண்டு உலக அமைதிக்கான ஒரு சிறந்த திரைப்படம்.. வாழ்த்துக்கள்.. என்று கூறியிருக்கிறார் இவர்.

    ஆயுதம் வேண்டாம்

    எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் சிட்டு. ஆயுதம் வேணா.. என்று படத்தின் டயலாக்கை கூறுகிறார் இவர்.

    காகித கொக்குகள் செய்வோம்

    வணிக திரைப்படமாக செதுக்கப்பட்ட சர்வதேச ஆவணப்படம். "காகித கொக்குகள் செய்வோம்" என புகழ்ந்திருக்கிறார் இவர்.

    வாழ்த்துகள்

    ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கை, முதலாளிகளின் சுரண்டல்கள், உண்மையான காதல், சாதிவெறியர்களால் காதலர்களுக்கு ஏற்படும் கொடுமைகள். பல நாடுகள் இருக்கலாம் ஆனால் பூமி ஒன்று தான். மிக சிறந்த திரைப்படம். மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறுகிறார் இவர்.

    English summary
    Twitter reactions about Gundu movie. Gundu movie released yesterday in world wide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X