ஜடா படம் எப்படி இருக்கு.. என்ன சொல்லுது டிவிட்டர் விமர்சனம்?
Recommended Video
சென்னை: கதிர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜடா திரைப்படம் குறித்த விமர்சனங்கள் டிவிட்டரில் வெளியாகி வருகின்றன.
நடிகர் கதிர், பரியேறும் பெருமாள், பிகில் படங்களை தொடர்ந்து நடித்திருக்கும் படம் ஜடா. இந்தப்படமும் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ரிலீஸான அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் ஆன்லைனில் ரிலீஸ் செய்துவிட்டது.

விளையாட்டு, பேய்
இந்நிலையில் இப்படம் குறித்த கருத்துக்களை ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் பிகில் படத்தை தொடர்ந்து இந்த படமும் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி வந்துள்ளதாகவும் ஆவி பேய் என பேய் படங்களையும் டச் செய்திருப்பதால் பல காட்சிகள் அலுப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

கலவையான விமர்சனம்
அதேபோல் கதிரிடம் விஜயின் மேனரிசம் தெரிவதாகவும் கூறியுள்ளனர். அதேநேரத்தில் படம் குறித்த கலவையான விமர்சனமும் எழுந்துள்ளது.
அடுத்தடுத்து பிளாப்
பாவம் கதிர்.. பரியேறும் பிளாக் பஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பிளாப்புகள்.. சத்ரு, இப்போது ஜடா என கூறியுள்ளார் இவர்.
பிகில் எஃபெக்ட்
கதிர் கால்பந்து வீரராக தாடியுடன் அழகாக இருக்கிறார். அப்டி பார்க்காதே பாடல் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் படத்தின் மேனரிசமும் ஸ்டைலும் கதிர் பர்ஃபார்மன்ஸிலும் தெரிகிறது.. பிகில் எஃபெக்ட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வேற லெவல்
ஜடா.. வேற லெவல் என்கிறார் இந்த நெட்டிசன்.
ரொம்பவே அவ்ரேஜ்
ஜடா அவ்ரேஜான படம்தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











