மரண பயத்தை காட்டும் 'இருட்டு'.. யூகிக்க முடியாத பேய் படம்.. டிவிட்டர் விமர்சனம்!
Recommended Video
சென்னை: இருட்டு படம் குறித்த விமர்சனங்கள் டிவிட்டரை மிரட்டி வருகின்றன.
தமிழ் சினிமாவில் இன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. தனுசு ராசி நேயர்களே, இருட்டு, குண்டு மற்றும் ஜடா.
இந்த படங்கள் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளன. குறிப்பாக படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் எப்படி உள்ளது என்பதை தெரிவித்து வருகின்றனர்.

ஹாரர் படம்
அதன்படி இன்று வெளியான படங்களில் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ள இருட்டு படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹாரர் படமான இருட்டு திரைப்படத்தை இயக்குநர் துரை இயக்கி இருக்கிறார்.

நெருக்கமான காட்சிகள்
சுந்தர் சிக்கு ஜோடியாக புதுமுகம் சாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லரிலேயே சுந்தர் சி, லிப் டூ லிப் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பது தெரிந்தது.

மிரட்டலலாக உள்ளது
இந்நிலையில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் வழக்கமான பேய் படங்களை விடவும் மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீக்என்டின் என்டெர்டெய்ன்மென்ட் இந்த படம்தான் என்றும் ரசிகர்கள் விமர்சனம் கூறி வருகின்றனர்.
இருட்டு சூப்பர்
குண்டு சிறப்பான படம்.. வித்தியாசமான ஸ்க்ரீன்ப்ளே.. இருட்டு சூப்பர் ஹாரர் படம்.. தனுசு ராசி நேயர்களே பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
க்ளைமேக்ஸ் செம
இருட்டு நல்ல படம்.. முதல் பாதி நல்லா இருக்கு.. இரண்டாம் பாதி அவ்ரேஜ்க்கும் மேல்.. நீண்ட க்ளைமேக்ஸ் செம.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
செம.. மிரட்டல்..
முதல்பாதி.. செம.. மிரட்டல்.. சூப்பர் ஊட்டி லொகேஷன்ஸ்.. என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
கடைசி 40 நிமிடம்
ஓகே... சராசரி ஹாரர் படங்களை விடவும் பெட்டர்.. கடைசி 40 நிமிடம் படத்தை காப்பாற்றிவிட்டது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
இன்ஸ்பையர்
சிச்சின் படத்தில் இருந்து இருட்டு படம் இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறார் இந்த நெட்டிசன்.
வீக்கென்ட் வின்னர்
இந்த வார இறுதியின் வின்னராக இருக்கப்போவது இருட்டு படம்தான் என்று தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.
யூகிக்க முடியாத..
இதுவரைக்கும் தமிழ்சினிமால வந்த வித்தியசமான அடுத்து என்ன நடக்கும் யூகிக்க முடியாத ஒரு பேய் படம் இருட்டு என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











