ஜகமே தந்திரம் தனுஷ் கெட்டப்பில் ஸ்பெஷல் ஸ்மைலியை வெளியிட்டது ட்விட்டர்!

சென்னை : அசுரன், கர்ணன் என அசரவைக்கும் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

Jagame Thandhiram Trailer Biggest Hidden Details revealed | Dhanush, Aishwarya Lekshmi | NETFLIX

சென்ற ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜகமே தந்திரம் கொரோனா சூழல் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் நேரடியாக ஓடிடிகள் வெளியாக உள்ள ஜகமே தந்திரம் டைரைலர் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் ஸ்பெஷல் ஸ்மைலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தி க்ரே மேன்

தி க்ரே மேன்

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்த கூடிய மிகச் சிறந்த நடிகராக உள்ள தனுஷ் இப்பொழுது தமிழ், இந்தியைத் தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர் படத்தை தொடர்ந்து இப்பொழுது அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் படக்குழுவுடன் தி க்ரே மேன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் தனுஷ் 43வது படத்திலும் நடித்து வருகிறார்.

லண்டனில் படப்பிடிப்பு

லண்டனில் படப்பிடிப்பு

வழக்கமான கேங்ஸ்டர் படங்களை தவிர்த்து தன்னுடைய ஸ்டைலில் ரசிக்கும்படியான கேங்க்ஸ்டர் படங்களில் இயக்கி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் இந்தியா மற்றும் லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தனுஷை இதுவரை பார்த்த அளவிற்கு முறுக்கு மீசையுடன் டோட்டலாக மாற்றியுள்ளனர்.

சர்ப்ரைஸ் பரிசு

சர்ப்ரைஸ் பரிசு

ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ வடிவுக்கரசி, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்க சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்,கிளாஸ், சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா போன்ற பஞ்ச் வசனங்கள் என தெறிக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் நிலையில் ட்விட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அளித்துள்ளது.

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

அதன்படி முறுக்கு மீசையுடன் சுருளியாக வலம் வரும் தனுஷ் போலவே இமேஜ் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் ஜகமே தந்திரம் படத்திற்காக வெளியிட்டு கௌரவப்படுத்தியது. இந்த ஏமோஜி இப்பொழுது ட்விட்டர் பக்கத்தில் அதிக அளவு பயன் படுத்தப்பட்டு வருகிறது. மெர்சல்,2.0 போன்ற படங்களை தொடர்ந்து இப்பொழுது ஜகமே தந்திரம் படத்திற்கும் ட்விட்டர் நிறுவனம் இமேஜிஜை வெளியிட்டுள்ளது தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X