Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான திரௌபதி.. படம் எப்படி? இதோ டிவிட்டர் விமர்சனம்! #திரெளபதி
சென்னை: திரௌபதி படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
வண்ணாரப் பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் படம் திரௌபதி. இதில் இரண்டு சமூகம், நாடகக்காதல், ஆணவக் கொலை ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளனர்.
இதன் ட்ரெயிலர் ரிலீஸ் ஆன போதே எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக எழுந்தது. படத்தை ரிலீஸ் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி திரௌபதி படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.
நெட்டிசன்ஸ் ரிவ்வியூ
பல இடங்களில் சிறப்பு காட்சியாக நேற்று இரவே படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எச் ராஜா உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் படத்தை பார்த்தனர். இந்நிலையில் திரௌபதி படம் எப்படி உள்ளது என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
பேச்சு பொருள்
திரௌபதி படம் குறித்து இந்த நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில் பிரபல நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம்.. ஆடியோ வெளியிட பெரிய மேடை கிடையாது.. தயாரிப்பாளர்கள் இல்லாமல் கூட்டு முயற்சியில் உருவான திரைப்படம்.. இன்று தமிழகம் முழுவதும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.. என தெரிவித்திருக்கிறார்
|
செம்ம மாஸ்
திரௌபதி படத்தை பார்த்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, படத்தை பார்த்து கூறிய கருத்தை #திரெளபதி.. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர். மேலும் திரௌபதி படம் மாஸ், பியூட்டிஃபுல், செம்ம என புகழ்ந்து வருகின்றனர் படத்தை பார்த்த ரசிகர்கள்.
|
நல்ல மெஸேஜ்
உண்மைக் கதைகள்.. சவாலான காட்சிகள் படங்களில் இடம் பெற்றுள்ளது. இயக்குநர் மற்றும் படக்குழு நன்றாக வேலை செய்திருக்கிறார். சில லோக்கல் டயலாக்குகள் சுவாரஸ்யமாக உள்ளது. இறுதியில் நல்ல மெஸேஜ். குடும்ப படம்.. என்னுடைய ரேட்டிங் 5க்கு 4.3 என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
குல தெய்வ டைட்டில்
இந்த வீக் எண்டில் நான்(ம்) அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
கிட்ட தட்ட இருபது ஆண்டுகளுக்கு பிறகு நான் ஒரு திரைப்படம் காண போகிறேன் என்றால் அது என் குல தெய்வ டைட்டில் #திரெளபதி தான் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
மிரட்டல் ஆரம்பம்
மிரட்டல் ஆரம்பம் என திரௌபதி படத்தை குறிப்பிட்டிருக்கிறார் இவர். படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் எழுந்துள்ள போதும் சாதிய ரீதியான கமென்ட்ஸ்களும் டிவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர்.
|
ஆட்டம் ஆரம்பம்
அற்புதமான படைப்பு இயக்குநர் மோகன் அவர்களே.. #திரெளபதி (பெண்கள் ) அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். முதல் இடத்தை பிடித்தாள் திரௌபதி என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன். திரௌபதி ஆட்டம் ஆரம்பம் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!