twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமிதாப் பச்சன் நடித்த ரோல்களிலேயே இதுதான் பெஸ்ட்.. குலாபோ சிட்டாபோ.. டிவிட்டர் ரிவ்யூ!

    |

    சென்னை: அமிதாப் பச்சனின் குலாபோ சிட்டாபோ படம் அமேஸானில் ரிலிஸ் ஆகியுள்ள நிலையில் படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    SINGER VELMURUGAN | நம்ம மக்கள் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது | V-CONNECT | FILMIBEAT TAMIL

    பாலிவுட்டின் பிதாமகர் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் 75 வயதை கடந்த போதும் வயோதிகத்திற்கு இடம் கொடுக்காமல் துடிப்புடன் இருந்து வருகிறார். திரைப்படங்கள், டிவி விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இந்த வயதிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கிறார்.

    இந்நிலையில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து நடித்தப்படம் குலாபோ சிட்டாபோ. ஷுஜித் சிர்க்கார் இயக்கிய இந்தப் படத்திற்கு ஷாந்தனு மொய்த்ரா, அபிஷேக் அரோரா, அனுஜ் கார்க் உள்ளிட்டோர் இசையமைத்திருந்தனர்.

    'இங்குதான் மேஜிக் நடக்கும்'.. சட்டையை தூக்கி.. நிக்கரை காட்டி.. பிரபல நடிகை அதகளம்!'இங்குதான் மேஜிக் நடக்கும்'.. சட்டையை தூக்கி.. நிக்கரை காட்டி.. பிரபல நடிகை அதகளம்!

    நேற்று ரிலீஸ்

    நேற்று ரிலீஸ்

    ரோனி லாஹிரி மற்றும் ஷீல் குமார் ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர். தற்போது லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தப் படம் நேற்று OTT தளமான அமேஸான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட்டது.

    வித்தியாசமான கெட்டப்

    வித்தியாசமான கெட்டப்

    பெரிய மூக்கு, தொப்பி, வெள்ளை தாடி என அமிதாப் பச்சன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் அமேஸான் ப்ரைமில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது? அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பு எப்படி என்பது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    வேடிக்கையான தருணம்

    வேடிக்கையான தருணம்

    குலாபோ சிட்டாபோ படத்தை பார்த்த இந்த நெட்டிசன், அமிதாப் பச்சன் சார் நடித்த சிறந்த கதாபாத்திரத்தில் ஒன்று.. என்று புகழ்ந்துள்ளார். மேலும் படத்தில் உள்ள ஒரு வேடிக்கையான தருணம் என இந்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

    சிறந்த நடிப்பு

    சிறந்த நடிப்பு

    குரல் முதற்கொண்டு மாற்றி நடிப்பதற்கு அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கானை தவிர இந்த இன்டஸ்ட்ரியில் வேறு யாரும் இல்லை. சந்தேகமின்றி இந்தியாவின் சிறந்த நடிகர் ரெட் ஹார்ட் அமிதாப் ஜிதான். குலாபோ சிட்டாபோவில் ஒப்பிட முடியாத சிறந்த நடிப்பு என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

    எப்போதும் போல் சிறப்பு

    எப்போதும் போல் சிறப்பு

    இயக்குநர் ஷுஜித் சிர்காரின் சூப்பரான இயக்கம் குலாபோ சிட்டாபோ. அமிதாப் பச்சன் ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பு எப்போதும் போல சிறப்பு. ஸ்க்ரீன்ப்ளேவும் ஸ்டோரி லைனும் சுவாரசியமாக உள்ளது என பிலிமி பாம்பே விமர்சித்துள்ளது.

    ஆரம்பம் இது..

    ஆரம்பம் இது..

    அமிதாப் பச்சனின் சிறந்த குரல் மாற்றம் மற்றும் நடிப்பு... ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக கதை அவ்வளவு நல்லது என சொல்ல முடியவில்லை, உள்ளடக்கம் இல்லாதது.
    ஆனால் OTT தளங்களில் படங்கள் வெளியிடப்படுவதற்கான புதிய சகாப்தத்தின் ஆரம்பம் இது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    இன்ட்ரஸ்ட்டிங் காட்சி..

    இன்ட்ரஸ்ட்டிங் காட்சி..

    படத்தின் ஒரு காட்சியில் கடைக்காரர் ஒருவர், 2500ஐ 12 ஆல் எளிமையாக விரைவில் பெருக்கிவிடுவார். ஆனால் அதை செய்ய எனக்கு 5 நிமிடங்களாவது ஆகும். எனக்கு எப்போதும் இதுபோன்ற சிறுசிறு தகவல்கள் உள்ள படங்கள் பிடிக்கும். என்னுடைய கணித ஆசிரியர் எப்போதும் கடைக்காரரை போல கணக்கிட சொல்லுவார் என புகழ்ந்துள்ளார்.

    கேக் மீது ஐஸை

    கேக் மீது ஐஸை

    அமிதாப் பச்சன் ஏன் பாலிவுட்டின் காட்ஃபாதர் என்று சொல்லப் படுகிறார் என்பதற்கான காரணம் குலாபோ சிட்டாபோ படத்தில் உள்ளது. அமிதாப் பச்சனும் ஆயுஷ்மான் குரானாவும் இணைந்து நடித்திருப்பது கேக் மீது ஐஸை வைத்திருப்பது போன்று உள்ளது என புகழ்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Twitter review of Amitabh bachchan's Gulabo Sitabo movie. Gulabo Sitabo movie released on Amzon Prime yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X