ஹிட் 3 ட்விட்டர் விமர்சனம்.. ரத்தம் தெறிக்க ஆக்சன்.. மாஸ் என்ட்ரி தரும் கார்த்தி

சென்னை: சூர்யாவின் சனிக்கிழமை படத்தை தொடர்ந்து இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி ஹிட் 3 படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் கேஎஜிப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹிட் 3 இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகளம் இடம்பெற்றிருப்தாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சர்ப்ரைஸ் நிறைந்த காட்சிகளும் இப்படத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

நானி நடித்துள்ள ஹிட் 3 படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியை எல்லோரும் Natural Star என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் ஹிட் 3 படத்தை பார்த்த மக்கள் சமூகவலைதளங்களில் பாசிட்டிவான விமர்சனங்களை அள்ளி தெளிக்கின்றனர். படத்தின் காட்சிகளையும் புகைப்படத்தையும் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர். படம் குறித்த கருத்துக்களை விமர்சனங்களாக தெரிவித்துள்ளனர்.

Twitter reviews of Nani s hit 3

ஹிட் 3 எப்படி இருக்கு?: படம் முழுக்க கொடூரமான போலீஸாக நானி இருக்கிறார். படம் முழுக்க ஆக்சன் ஆக்சன் என கேப்சனுடன் ரசிகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். முதல் பாதிக்கு முன்பு கொஞ்சம் போர் அடிப்பதாகவும், எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் மாஸாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். நானி அவர்கள் மாஸ் தாண்டம் ஆடியிருப்பதாகவும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளை குறைத்திருக்கலாம் ஆனால், படத்திற்கு தேவை என்பதால் ஓகே என ஒரு ரசிகை தெரிவித்துள்ளார். முதல் முறையாக ரொம்ப violence காட்சிகள் நிறைந்த படத்தை பார்த்து என்ஜாய் செய்ததாகவும் ஆனால் violence இருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

பிளாக்பஸ்டர் ஹிட்: நானிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக ஹிட் 3 இருக்கிறது. இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெலுங்கு ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். படம் பார்த்த அனைவரும் பாசிட்டிவான கருத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டியின் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கின்றன. நல்ல படமாக வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு குறை கூட கூற முடியாது தரமான சம்பவம் செய்துவிட்டார் நானி என்றும் புகழ்பாட தொடங்கியுள்ளனர். படம் முழுக்க கோபக்கார போலீஸை பார்த்து பயந்து விட்டேன். என்னங்க இந்த மனுஷன் இப்படி நடித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

நடிப்பு அரக்கன்: நானியை அனைவரும் நடிப்பு அரக்கன் என்றும் புகழ் பாட தொடங்கிவிட்டனர். கல்ட் கிளாஸிக் ஹிட் என்றும் கூறியுள்ளனர். படத்திற்கு ஒரு சிலர் 4 மற்றும் 3.5 என ரேட்டிங் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வாரம் சிறந்த படமாக ஹிட் 3 இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரே ஒரே கிங் வந்து ஒட்டுமொத்த பேரையும் தூக்கி சாப்பிட்டது போல் இருக்கிறது நானியின் நடிப்பு என ட்விட்டரில் கருத்து தெரிவிககின்றனர்.

கார்த்தி என்ட்ரி: ஹிட், ஹிட் பார்ட் 2, ஹிட் 3 படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்திற்கான ரெஸ்பான்ஸூம் பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. இதனால், இயக்குநர் சைலேஷ் கொலானு ஹிட் பார்ட் 4 வர இருப்பதற்கான அறிகுறியை க்ளைமேக்ஸில் தெரிவித்துவிட்டார். இதில், நடிகர் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது. போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளோடு கார்த்தி என்ட்ரி கொடுக்கிறார். இதற்கு திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வீடியோவோடு சமூகவலைதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். சைலேஷ் கொலானு இயக்கத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி நடிப்பதால் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X