மேற்கு வங்க கலவரம் குறித்த தொடர்ச்சியான ட்வீட்கள்.. நடிகை கங்கனாவின் கணக்கை முடக்கிய ட்விட்டர்!

மும்பை: ட்விட்டர் விதிகளை மீறியதாக நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது.

தேர்தல் ரிசல்ட் வந்ததை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக தொடர்ச்சியான ட்வீட்களை நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டு வந்த நிலையில், அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவித்து #KanganaRanaut என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மோடிக்கு ஆதரவு

மோடிக்கு ஆதரவு

கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இந்தியாவின் #ResignModi என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது. ஆனால், நடிகை கங்கனா ரனாவத் வெளிநாட்டு ஊடகங்களையும், மோடிக்கு எதிராக ட்வீட் செய்பவர்களையும் எதிர்த்து ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு வந்தார்.

சோனு சூட்டுக்கு எதிராக

சோனு சூட்டுக்கு எதிராக

கொரோனா காலத்தில் பெருவாரியான மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக அவர் ஒரு ஃபிராடு என்றும் இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி மக்களிடம் இருந்து அவர் பணம் சம்பாதிக்கிறார் என சமூக வலைதளத்தில் பரவிய ட்ரோலை நடிகை கங்கனா ரனாவத் லைக் செய்து சோனு சூட் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்தார்.

ட்விட்டர் சண்டை

ட்விட்டர் சண்டை

கடந்த 2020ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் கணக்கை தொடங்கிய நடிகை கங்கனா ரனாவத், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் திரையுலகினருக்கு எதிராக ஏகப்பட்ட கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பகிரங்க சண்டைகளில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே சில முறை அவரது ட்வீட்களை ட்விட்டர் நீக்கிய நிலையில், தற்போது அவரது கணக்கை முடக்கி உள்ளது.

மேற்கு வங்க கலவரம்

மேற்கு வங்க கலவரம்

தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் தொடர்பாக தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், அவரது ட்விட்டர் கணக்கு ட்விட்டர் விதிமுறைகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டும் ஆதரவும்

திட்டும் ஆதரவும்

கங்கனா ரனாவத் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களையே ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் என்றும், அவருக்கு இது நல்லா வேண்டும் என்றும் பல பாலிவுட் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதே சமயம் கங்கனா ரனாவத்தின் ஆதரவாளர்கள், தொடர்ந்து சமூக வலைதளத்தில் துணிச்சலாக தனது கருத்துக்களை எடுத்து வைத்து அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியது அராஜக செயல் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X