»   »  பிறந்தநாளை முன்னிட்டு... இந்தியளவில் ரஜினியை கவுரவித்த ட்விட்டர் தளம்

பிறந்தநாளை முன்னிட்டு... இந்தியளவில் ரஜினியை கவுரவித்த ட்விட்டர் தளம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தன்னுடைய 10 வது பிறந்தநாளை சீரும், சிறப்புமாகக் கொண்டாடிய ட்விட்டர் தளம் நடிகர் ரஜினியை கவுரவப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் முத்திரை பதித்த வரலாற்று சிறப்பு மிக்கத் தருணங்களை, ட்விட்டர் தளம் பகிர்ந்து கொண்டுள்ளது.

மும்பை தீவிரவாதம், சென்னை வெள்ளப்பெருக்கு தொடங்கி ரஜினி ட்விட்டரில் இணைந்த தருணமும், இந்த டாப் 10 முத்திரைத் தருணங்களில் இடம் பிடித்திருக்கிறது.

ட்விட்டர்

ட்விட்டர்

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தன்னுடைய 10 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியது. இதனை முன்னிட்டு கடந்த 10 வருடங்களில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 வரலாற்று சிறப்பு மிக்கத் தருணங்களை, ட்விட்டர் இந்தியா என்ற பக்கத்தில் வெளியிட்டது.

மும்பை தாக்குதல்

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தப் பட்டியலில் முதலிடம் கிடைத்திருக்கிறது. 2011 ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றது, மும்பை கற்பழிப்பு சம்பவம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சினின் ஓய்வு அறிவிப்பு, நரேந்திர மோடி பிரதமரானது, தாஜ்மஹால் ட்விட்டரில் இணைந்தது, சென்னை வெள்ளப்பெருக்கு மற்றும் தீபாவளி போன்ற தருணங்களை ட்விட்டர் தன்னுடைய முத்திரைத் தருணங்களாக அறிவித்திருக்கிறது.

ரஜினி

இதில் ரஜினி ட்விட்டரில் இணைந்ததை தன்னுடைய 6 வது முத்திரை பதித்த தருணம் என்று ட்விட்டர் பெருமையுடன் கூறியிருக்கிறது. இதுகுறித்து ட்விட்டர் " தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த 2014 ம் ஆண்டு மே மாதம் 5 ம் தேதி சமூக வலைத்தளதில் தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்தார். அவர் இணைந்த 24 மணி நேரத்தில்அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2,௦௦,௦௦௦ மாக உயரந்தது என்று கூறியிருக்கிறது". இந்தியளவில் வேறு எந்த நடிகருக்கும் இந்த பெருமை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Twitter Top 10 Iconic Moments Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil