போதைப் பொருள் பயன்படுத்தினாரா..? வம்பில் சிக்கிய பிரபல இயக்குனர்... வான்டடாக வந்து விளக்கம்!

By

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்தியவதாக வந்த புகாரை அடுத்து பிரபல இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷயப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ்(The lunch Box),கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

சில இந்தி படங்களில் நடித்தும் உள்ளார். இவர் தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

வீடியோ கால்

இதில், நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, ராஷிகண்ணா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகரும் இயக்குனருமாக அனுராக் காஷ்யப் போதைப் பொருள் உட்கொண்டதாக சர்ச்சை எழுந்தது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பிரபலங்கள் வீடியோ கால் மூலமாக கலந்துரையாடி வருகின்றனர்.

போதை பொருள்

அப்படி இயக்குனர் அனுராக் காஷ்யப் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. ட்விட்டரில் ரசிகர் ஒருவர், அந்த வீடியோ காட்சியை பதிவிட்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை, அனுராக் பயன்படுத்துவதாக புகார் கூறியிருந்தார். போலீசார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

அது புகையிலைதான்

அது புகையிலைதான்

நெட்டிசன்கள் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். சிலர் அவரை கண்டபடி திட்டியிருந்தனர். இதையடுத்து நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப், மும்பை போலீஸை டேக் செய்து அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், 'முதலும் கடைசியாகத் தெளிவு படுத்துகிறேன். அந்த வீடியோவில் நான் புகையிலையைதான் சுருட்டுகிறேன்.

எங்கு கிடைத்தது?

எங்கு கிடைத்தது?

கிண்டல் அடிப்பவர்கள் மற்றும் பக்தர்களின் திருப்திக்காக முழுவதுமாக என்னிடம் விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தும் அனுராக் காஷ்யபை, நெட்டிசன்கள் விடவில்லை. ஊரடங்கு நேரத்தில் உங்களுக்கு எங்கு சிகரெட் கிடைத்தது என்றும் கடைசியில வாங்கினீங்களா? வீட்டுல ஸ்டாக் வச்சிருக்கீங்களா? என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X