தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்குடன் மோத ரெடியாகும் தல ரசிகர்கள்.. 5 மணிக்கு ஸ்பெஷல் டேக் வருதாம்!

சென்னை: ஆண்டின் இறுதி நாளிலும் அஜித் - விஜய் ரசிகர்களின் ட்விட்டர் வார் ஓயாது போல் தெரிகிறது.

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அதனை வீழ்த்த தல அஜித் ரசிகர்கள் ஸ்பெஷல் டேக் ஒன்றை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டு டிரெண்ட் செய்ய காத்திருக்கின்றனர்.

இந்தியளவில் ட்விட்டர் வார் என்றாலே தல - தளபதி ரசிகர்களின் ட்விட்டர் சண்டை தான் இதுவரையிலும் மிரட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கும் மிகப்பெரிய அளவிலான ட்விட்டர் யுத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் மாஸ்?

யார் மாஸ்?

தளபதி விஜய் மாஸா அல்லது தல அஜித் மாஸா என்ற ரீதியில் தொடர்ந்து தல - தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் சண்டையிட்டு வருகின்றனர். கோலிவுட்டை பொறுத்தமட்டில், இருவரது படங்களும் பல நூறு கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் கலக்குவது குறிப்பிடத்தக்கது.

ஆபாச மீம்கள்

ஆபாச மீம்கள்

தல - தளபதி ட்விட்டர் வார் ஆரோக்கியமான ரீதியில் சென்றால் அதனை ரசிக்கலாம். ஆனால், மிகவும் ஆபாசமான அளவுக்கு வெளியிடப்படும் மீம்களால் இந்த ட்விட்டர் சண்டை மிகவும் மோசமாகி வருகிறது.

அவங்களே லைக் பண்ணமாட்டாங்க

அவங்களே லைக் பண்ணமாட்டாங்க

மிகவும் கொச்சையாகவும், ஆபாசமாகவும் செல்லும் ட்விட்டர் சண்டைகளை தவிர்க்க சொல்லி, தல அஜித் மற்றும் தளபதி விஜய் தங்களின் படங்கள் மூலமாகவும், பொது மேடைகளிலும் ஓப்பனாக சொல்லியும் ரசிகர்கள் கேட்பதாக தெரியவில்லை.

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோ அறிவித்ததில் இருந்தே தளபதி ரசிகர்கள் இந்த புத்தாண்டை வேற லெவலில் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

தல ரசிகர்கள் பிளான்

எப்போதுமே போலவே தளபதி விஜய் படம் குறித்த ஹாஷ்டேக் டிரெண்டானால், அதற்கு போட்டியாக தல அஜித் ரசிகர்கள் உருவாக்கும் ஹாஷ்டேக் டிரெண்டாகும். தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ள நிலையில், இன்றும் ஒரு புதிய டேக்கை உருவாக்கி தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்கை வீழ்த்த தல ரசிகர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர்.

மரண வெயிட்டிங்

அநேகமாக அந்த ஹாஷ்டேக் வலிமையாக இருக்கும் என்றும், அதற்காக மரண வெயிட்டிங் என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னைக்கு சாயங்காலம் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X