twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளைஞர்களை சீரழிக்கும் படமா ஆதித்ய வர்மா?

    |

    Recommended Video

    Adithya Varma Public Review | Dhruv Vikram | Vikam | Adithya Varma Movie Review

    சென்னை: ஆதித்ய வர்மா தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் படம். இந்த படம் தெலுங்கில் வெளியான போதே இளைஞர்களை சீரழிக்கும் படம் என்ற கருத்தும், படத்திற்கு எதிரான கண்டனங்களும் எழுந்தன.

    அதீத காதல், சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, காமம் போன்ற இளைஞர்களை கெடுக்கும் அத்தனை விசயங்களும் தான் ஆதித்ய வர்மா படத்தின் கதைக்களமாக இருக்கிறது.

    பாலிவுட்டில் வெளியான கபீர் சிங் படத்திற்கும் இதே பிரச்சனை எழுந்த நிலையில், தற்போது த்ருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆதித்ய வர்மா படத்திற்கும் அதே பிரச்சனை சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    இன்னும் கிளம்பலையா

    ஆதித்யவர்மா படம் குடியை இளைஞர்களிடம், கெத்து இது தான்னு பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு சமுக சீரழிவை உருவாக்குவது கண்டிக்கத்தக்கதுனு யாரும் இன்னும் கிளம்பில்லையா என இந்த படம் குறித்து வெளியாகும் விமர்சனங்களில் வைக்கப்படும் கருத்தை கலாய்த்து இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

    50% கூட இல்லை

    ஆதித்ய வர்மா படம் அர்ஜுன் ரெட்டி படத்துக்கு 50% கூட இல்லை என்றும், இதற்கு தமிழில் அர்ஜுன் ரெட்டி படத்தை டப்பிங் செய்து வெளியிட்டாலாவது ஓடியிருக்கும் என்றும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் டிசாஸ்டர் என்றும் இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

    வெல்கம் டு தமிழ் சினிமா

    நடிகர் சியான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானதை, எந்திரன் படத்தில் ரஜினி பிரசவம் பார்க்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு வெல்கம் டு தமிழ் சினிமா என இந்த ரசிகர் வரவேற்றுள்ளார்.

    ஆறுச்சாமி மவன் ராம் சாமி

    ஆதித்ய வர்மா படத்தில் த்ருவ் விக்ரமின் நடிப்பை கிண்டல் பண்ணும் விதமாக சாமி 2 படத்தில் விக்ரம் பேசும் காட்சியை பதிவு செய்த நெட்டிசனை கண்டிப்பது போல் கலாய்த்துள்ளார் இந்த ரசிகர்.

    இளைஞர்களை சீரழிக்கும் படம்

    இளைஞர்களை சீரழிக்கும் படம், இப்படம் உண்மையான தமிழர் வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதிபலிக்கின்றது. பொய்களை தீர்வுகளாகப் புலப்படுத்தி தமிழர்கள் குறித்த பிழையான புரிதலைப் பெற வழிவகுக்கிறது என படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை இந்த நபர் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Adithya Varma (Dhruv) is a classic example of an alpha male, he believes in his ideology and refuses to change his character for anyone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X