twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷாருக்கானை வெறுப்பவர்களே வாயை மூடுங்கள்: ட்விட்டரில் குவியும் ஆதரவு

    By Siva
    |

    சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று கூறி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பாஜக, விஷ்வ இந்து பரிஷத் ஆட்கள் தெரிவிப்பதை எதிர்த்தும் ஷாருக்கானுக்கு ஆதரவாகவும் பலர் ட்வீட் போட்டுள்ளனர்.

    நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரிப்பது குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கவலை தெரிவித்தார். உடனே அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி தெரிவித்தார்.

    பாஜக பொதுச் செயலாளர் விஜய்வர்கியாவோ, ஷாருக்கான் இந்தியாவில் வசித்தாலும் அவரது இதயம் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்தார். ஷாருக்கான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் போன்று பேசுகிறார், அவர் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறினார். இந்நிலையில் ஷாருக்கானுக்கு ஆதரவாக பலர் ட்வீட் போட்டுள்ளனர்.

    வெறுப்பு

    வெறுப்பவர்கள் வாயை மூடவும். நாட்டின் இதயத்துடிப்பான அவர் எங்கும் போக மாட்டார். @iamsrk #IStandwithSRK என ஆர்த்தி ட்வீட் செய்துள்ளார்.

    கான்

    என் பெயர் கான். நான் ஒரு தீவிரவாதி அல்ல என்று கூறிய பிறகும் மக்கள் ஏன் அவருக்கு எதிராக உள்ளனர்??? #IStandwithSRK என கௌரவ் தெரிவித்துள்ளார்.

    இந்து

    நான் ஒரு இந்து. எனக்கு ஷாருக்கானை பிடிக்கும். யோகி ஆதித்யநாத் இந்தியாவை விட்டு வெளியேறட்டும். அவர் எதற்கும் உதவாதவர் என்று உத்சவ் ஆத்ரே தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

    யோகி

    #IStandwithSRK இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவரை ஹபீஸ் சயீத் என்கிறார்கள். யாருய்யா அந்த யோகியை தலைவர் ஆக்கியது என ஹர்ஷித் சிங்
    கூறியுள்ளார்.

    தடை

    மாட்டிறைச்சி தடைக்கு பிறகு இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தங்களின் கருத்தை தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தான் புதிய தடை
    #BJPDestroyingIndia #IStandwithSRK என மீனா ராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tweeples have supported Bollywood actor Shahrukh Khan and tweeted for him after BJP MP Yogi Adityanath called him Hafiz Saeed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X