ரன்வீருக்கு என்ன ஆச்சு.. தீபிகாவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுக்கிறாரா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
மும்பை: பெண்கள் அணியும் ஃபேஷன் உடை போன்ற உடையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
தீபிகா படுகோனேவின் கணவரான ரன்வீர் சிங் இப்படி வித்தியாசமான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள், என்ன சார் தீபிகா படுகோனேவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுத்திருக்கீங்க என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இதுக்குப்பேரு ஃபேஷனா?
தீபிகா படுகோனேவின் கணவரும் பிரபல பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங், ஃபேஷன் துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்கு தற்போது அவர் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்களே சாட்சி. வெள்ளை நிற புள்ளிகள் போட்ட ப்ளூ கலர் டாப்ஸ் மற்றும் ஹெட்பேண்ட், சின்ன கண்ணாடி, சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த பைஜாமா பேண்ட் என வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
பெண் குழந்தை
வீட்டில் ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்து பெண் குழந்தை ஏதும் இல்லையென்றால், அந்த ஆண் குழந்தைக்கு பெண் குழந்தையின் உடையை போட்டு அழகு பார்க்கிறேன் என்ற பேர்வழியில் டார்ச்சர் செய்வார்கள். அதுபோல இருக்கிறது உங்கள் உடை என ரன்வீர் சிங்கின் இந்த தோற்றத்தை பார்த்து குபீரென சிரித்து பின்னர் இந்த கமெண்ட்டை இந்த ரசிகர் போட்டிருக்கிறார்.
தீபிகா டிரெஸ்
பெண்கள் அணியும் உடை போன்று அணிந்து கொண்டு ஃபேஷன் போட்டோஷூட் நடத்தியுள்ள ரன்வீர் சிங்கின் புதிய புகைப்படங்களை பார்த்து சிரிக்காத ரசிகர்களே பாலிவுட்டில் இருக்க மாட்டார்கள். மேலும், தீபிகா படுகோனேவின் உடைகளை எடுத்து போட்டுக்கிட்டீங்களா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
தீபிகா ரியாக்ஷன்
இந்த புகைப்படத்தை பார்த்தால் தீபிகா படுகோனேவின் ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும் என இந்த நெட்டிசன் ட்ரோல் மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். என்ன பார்த்தா உனக்கு என்ன நக்கலா இருக்கா? என கேட்பது போல இருக்கிறது அந்த மீம். தீபிகாவின் நிலைமை ரொம்ப பாவம் பாஸ்!
செம்ம செக்ஸி
ரன்வீர் சிங்கின் இந்த புதிய போட்டோஷூட்டை பார்த்து பல ரசிகர்களும் ஜொள்ளு விட்டு வருகின்றனர். தீபிகா படுகோனேவை விட செக்ஸியாக நீங்க இருக்கீங்க என்றும் கமெண்ட் செய்து கண்டமேனிக்கு கலாய்த்து தள்ளி வருகின்றனர். மேலும், சிலர் ஹாட் ஹீரோயினை போன்று இருக்கிறார் ரன்வீர் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











