ஹேப்பி நியூ இயர் பார்ப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதி: கல கல ட்வீட்கள்
மும்பை: ஹேப்பி நியூ இயர் படம் பற்றி மக்கள் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
தீபாவளியையொட்டி ரிலீஸான ஷாருக்கான் நடித்த ஹேப்பி நியூ இயர் படம் 3 நாட்களில் ரூ.108 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் படம் பற்றி மக்கள் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
அதில் சில கேலி ட்வீட்கள் இதோ...

ராகுல்
ராகுல் காந்தி ஒரு அரசியல்வாதி என்பது போல் தான் ஷாருக்கான் ஒரு பைட்டர்.

இன்சூரன்ஸ்
ஹேப்பி நியூ இயர் படத்தை பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுத்துவிட்டன.

தக்காளி
ஹேப்பி நியூ இயர் படத்தை பார்க்க திட்டமிட்டால் எந்திரம் தயாரிக்கும் முட்டைகளை விட தக்காளி வாங்கி விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உதவி செய்யுங்கள்.

வேஸ்ட்
ஹேப்பி நியூ இயர் நேரத்தை வீணடிக்கும் படம். ஓஷன்ஸ் 11 படத்தை காப்பியடிக்க முயன்றுள்ளனர்.

நஷ்டஈடு
ஹேப்பி நியூ இயர் படத்தை பார்த்த பிறகு டிக்கெட்டை வீசிவிடாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கலாம்.

ரா ஒன்
ஷாருக்கான் ஹேப்பி நியூ இயரில் ரான் ஒன் சாதனையை முறியடித்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு வருபவர்கள் நேராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











