»   »  என்னடா நடக்குது இங்கே? சிம்பு-ஹன்சிகா டுவிட்டர் ஸ்டேட்டஸ்

என்னடா நடக்குது இங்கே? சிம்பு-ஹன்சிகா டுவிட்டர் ஸ்டேட்டஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இவங்க லவ் பண்ணுவாங்களாம்... போட்டோ போடுவாங்களாம்... அப்புறம் பிரிஞ்சிடுவாங்களாம்... மறுபடியும் சேர்ந்து நடிச்சு படத்தை ரிலீஸ் பண்ணுவாங்களாம்.... டுவிட்டர்ல பீலிங்கோட ஸ்டேட்டஸ் போடுவாங்களாம்.... சிம்பு ஹன்சிகாவைப் பார்த்து என்னடா நடக்குது இங்கே? என்று டுவிட்டர்வாசிகளே கேட்கின்றனர்.

நயன்தாராவை விட்டு பிரிந்த உடன் ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இவர்கள் காதலையும் ஊடகங்கள் ஊட்டி வளர்த்தன. யார் கண் பட்டதோ இந்த காதலும் முறிந்து போனது. அதன்பின்னர் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது.

வாலு படத்தின் ரிலீஸ் பெயரைப் போலவே நீண்டு கொண்டே போனது. ஒருவழியாக ஆகஸ்ட் 14ல் ரிலீஸ் என்று முடிவு செய்யப்படவே மறுபடியும் சிம்பு ஹன்சிகா இடையேயான நட்பு துளித்திருப்பதாகவே தெரிகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 9ம் தேதி ஹன்சிகா 24-வது பிறந்தநாளை தனது தத்துக்குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் மோத்வானி. ஆர்யா, த்ரிஷா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதில் சிம்புவும் ஒருவர் என்பதுதான் ஹைலைட்.

நன்றி சொன்ன ஹன்சிகா

காதலித்துப் பிரிந்தபின் ஹன்சிகாவுடன் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாத சிம்பு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவே, பதிலுக்கு ஹன்சிகாவும் ‘தேங்க் யூ சிம்பு' எனச் சொன்னார்

என்னடா நடக்குது?

சிம்புவும், ஹன்சிகாவும் மாறி மாறி டுவிட்டரில் வாழ்த்து சொல்ல விடுவார்களா நம் வலைஞர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

விடு விடு ஏதோ ஒண்ணு

சிம்புக்கு ஹன்சிகா இல்லாட்டி நயன்தாரா ஏதோ ஒண்ணு உறுதி என்கிற ரீதியில் ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்து விட்டனர். வாலுதான் சக்சஸ் ஆயிருச்சேப்பா.

English summary
After waiting in the wings for nearly three years, Simbu and Hansika starrer Vaalu has finally hit the screens here the twitter comment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil