மசாஜ் சென்டர் நடத்தும் நடிகை.. திறந்து வைத்த சிவகார்த்திகேயன்.. வசமா சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: இரு நடிகைகள் பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸில் புகார் அளித்திருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார். சினிமா பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் பற்றிய அந்தரங்க விவகாரங்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அவரது பேச்சுக்கு தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில நடிகைகள் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தனர். இந்நிலையில், இரண்டு நடிகைகள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்திருப்பதாக அவரே கூறியிருக்கிறார்.

பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல்களில் தொடர்ந்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். யூடியூபில் வரும் வியூஸ் மற்றும் பணத்துக்காகத் தான் பயில்வான் ரங்கநாதன் எதுவுமே தெரியாமல் அபாண்டமாக நடிகைகள் பற்றி பழி போடுகிறார் என பலரும் அவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Two actress raised complaint against Bayilvan Ranganathan

ஆபாசம் காட்டுவது நடிகைகளாம்: இரண்டு நடிகைகள் தன் மீது புகார் கொடுத்ததாக கூறிய பயில்வான் ரங்கநாதன் தான் இதுவரை எந்த நடிகை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை என்றும் நடிகைகள் தான் இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்றும் நம்ம கலாச்சாரத்தையே பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு கெடுத்து வருகின்றனர். அதை சொன்னால் நான ஆபாசமாக பேசுகிறேன் என புகார் கொடுக்கின்றனர் என பயில்வான் ரங்கநாதன் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

Two actress raised complaint against Bayilvan Ranganathan

மசாஜ் சென்டர் நடத்தும் நடிகை: சோனியா எனும் நடிகை சென்னையில் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். சமீப காலமாக மசாஜ் சென்டர்களில் ரெய்டுகள் எல்லாம் நடக்கிறதை கேள்விப்பட்டு வருகிறோம். சோனியாவின் மசாஜ் சென்டரை திறந்து வைத்தது சிவகார்த்திகேயன் எனக் கூறிய பயில்வான் ரங்கநாதன் அவருடைய மசாஜ் சென்டரில் பலான மேட்டர்கள் நடப்பதாக பேசி சிக்கி இருக்கிறார் அதன் காரணமாகத்தான் அந்த நடிகை பயில்வான் ரங்கநாதன் மீது புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு நடிகைகள் புகார்: திவ்யா மற்றும் சோனியா என இரு நடிகைகள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்துள்ள நிலையில், இதற்கு பின்னால் யாரோ ஒரு பெரிய கை இருக்கிறது என்றும் அந்த தூண்டுதலின் பேரில் தான் என் மீது இருவரும் புகார் அளித்து குண்டர் சட்டத்தில் எல்லாம் போட சொல்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் பயப்படக் கூடிய ஆள் நான் கிடையாது என பயில்வான் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X