போன வாரம் நடிகை சிம்ரன், இந்த வாரம் நடிகை நிகிதா பலி: என்ன நடக்கிறது?

By Siva

புவனேஸ்வர்: கடந்த வாரம் நடிகை சிம்ரன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நடிகை நிகிதா பலியாகியுள்ளார்.

ஒடியா மாநில ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஒரு நடிகை, இந்த வாரம் ஒரு நடிகை என்று இரண்டு நடிகைகள் இறந்துள்ளனர்.

இரண்டுமே இயற்கையான மரணம் அல்ல என்று கூறப்படுகிறது.

சிம்ரன்

சிம்ரன்

சம்பல்புரி ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் செல்ஃபி பெபோ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிம்ரன் சிங். அவர் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்ரா மாதா அருகே இருக்கும் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை அவரின் கணவர் கொலை செய்திருப்பார் என்று சிம்ரனின் அம்மா தெரிவித்துள்ளார்.

கணவர்

கணவர்

சிம்ரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிர் இழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்ரனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரின் கணவர் த்ருப்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வாரம்

இந்த வாரம்

கடந்த வாரம் சிம்ரன் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒடியா நடிகை நிகிதா மாடியில் இருந்து விழுந்து பலியானார். அவரை அவரின் கணவர் லிபன் தள்ளிவிட்டு கொலை செய்தததாக நிகிதாவின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து லிபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணம்

மரணம்

ஒடிஷாவில் திருமணமான இரண்டு நடிகைகள் அதுவும் அடுத்தடுத்த வாரத்தில் இறந்துள்ளது பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இரண்டு பேருமே கணவன்மார்களால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: nikita நிகிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X