அதர்வாவுடன் இணைந்த இரண்டு அமுல் பேபி.. அஜர்பைஜானில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

சென்னை: பூமராங் படத்தை தொடர்ந்து மறுபடியும் இயக்குநர் கண்னன் இயக்கத்தில் அதர்வா நடித்து வருகிறார்.

தெலுங்கு ரீமேக்கான நின்னு கோரி படத்தை தமிழில் அதர்வாவை வைத்து சத்தமில்லாமல் ரீமேக் செய்து வருகிறார் இயக்குநர் கண்ணன்.

சந்தானத்தின் படத்தை இயக்கி முடித்த கையுடன் அதரவா படத்தை ஆரம்பித்து இயக்கி வரும் கண்ணன், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவுடன் அஜர்பைஜான் செல்கிறார்.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

கடந்த 2017ம் ஆண்டு நானி, நிவேதா தாமஸ் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நின்னு கோரி படத்தை தான் தமிழில் கண்ணன் அதர்வா, அனுபமா பரமேஸ்வரனை வைத்து ரீமேக் செய்து வருகிறார். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ சுழலி

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகிறார். நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அனுபமா, தற்போது கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

அமுல் பேபி

அனுபமா பரமேஸ்வரன் ஒரு அமுல் பேபி படத்தில் இடம்பெற்றிருக்கும் போது, இன்னொரு ரியல் அமுல் பேபியையும் இயக்குநர் கண்ணன் இந்த படத்தில் இறக்கியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வில்லன் அமிதாஷ் பிரதான் தான் அந்த அமுல் பேபி. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் அமிதாஷ், அதர்வா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அஜர்பைஜான்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் முக்கியமான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டன. இந்நிலையில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜானில் கடைசி 15 நாட்கள் ஷூட்டிங்கிற்காக அடுத்த வாரம் செல்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X