டிவி நடிகை தற்கொலையில் திடுக் ட்விஸ்ட்.. காதல் போட்டி காரணமா? இந்நாள், முன்னாள் காதலர்கள் கைது!
ஐதராபாத்: டிவி சீரியல் நடிகை தற்கொலை விவகாரத்தில் அவருடைய முன்னாள் மற்றும் இந்நாள் காதலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரவாணி கொண்டபள்ளி. ஐதராபாத் மதுரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
மனசு மமதா, மௌனராகம் உள்பட பல டிவி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் இவர்.

டிக்டாக் காதல்
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி நடிகை ஸ்ரவாணி குடும்பத்தினர் அளித்த புகாரில், ஸ்ரவாணிக்கு, காக்கிநாடாவைச் சேர்ந்த தேவராஜ் ரெட்டி என்ற இளைஞருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்
இதை ஸ்ரவாணியிடம் காண்பித்து, தேவராஜ் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். பணம் கொடுக்கவில்லை என்றால், சமூக வலைதளங்களில் அந்த போட்டோ மற்றும் வீடியோவை பதிவேற்றி விடுவதாகக் கூறினார். அதிர்ச்சி அடைந்த ஸ்ரவாணி, பயத்தில் முதலில் ரூ.30 ஆயிரமும் பிறகு ரூ.80 ஆயிரமும் கொடுத்துள்ளார். தொடர்ந்தும் மிரட்டி வந்தார். இதனால் ஸ்ரவாணி தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறியிருந்தனர்.

வீட்டில் பிரச்னை
ஆனால், வேறு ஒரு தகவலும் கூறப்பட்டது. ஸ்ரவாணியும் தேவராஜும் காதலித்து வந்ததாகவும் நடிகையின் வீட்டில் இந்த காதலை ஏற்காததால் காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். ஸ்ரவாணி தற்கொலை செய்துகொண்ட அன்றும் இந்தப் பிரச்னை வாக்குவாதமாக மாறியது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.

டார்ச்சர் செய்தார்
இந்நிலையில் தேடப்பட்டு வந்த தேவராஜ், போலீசில், சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஸ்ரவாணியை அவர் குடும்பத்தினரும் சாய் கிருஷ்ணா என்பவரும் டார்ச்சர் செய்ததாகவும் அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் சாய் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணாவுடன் காதல்
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஸ்ரவாணியும் அவர் குடும்ப நண்பர் சாய் கிருஷ்ணாவும் முதலில் காதலித்துள்ளனர். பிறகு பிரிந்துவிட்டனர். அடுத்து தேவராஜை, ஸ்ரவாணி காதலிக்கத் தொடங்கினார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஸ்ரவாணியும் தேவராஜும் ரெஸ்டாரென்ட் ஒன்றில் சந்தித்துள்ளனர்.
Recommended Video

ஸ்ரவாணியை அடித்தார்
அங்கு சாய் கிருஷ்ணாவும் இருந்துள்ளார். அவர், நடிகையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அடித்துள்ளார். பின்னர் நடிகையின் குடும்பத்தினரை ரெஸ்டாரண்டுக்கு வரவழைத்து, தேவராஜுடன் நடிகை இருப்பதை காட்டிக் கொடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் தேவராஜ், சாய்கிருஷ்ணா இருவரையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











