Just In
- 4 min ago
ஸ்விம்மிங், யோகா, சைக்கிளிங்... மீ டூ தனுஶ்ரீ மீண்டும் ரெடி
- 9 min ago
நண்பர்களுடன் முகத்தை மூடியபடி ஊர் சுற்றிய பிரபல நடிகை.. ஆனாலும் நம்ம மக்கள் கண்டுபிடிச்சுட்டாங்களே!
- 20 min ago
இப்படியே போயிட்டிருந்தா எப்படி? 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...
- 28 min ago
பெட்டில் செம ஹாயாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Sports
தோல்விக்கு முக்கிய காரணம் கோலி செய்த இந்த தவறு தான்.. புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்!
- News
குடியுரிமை சட்டத்திருத்தம்.. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகம்
- Automobiles
விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் புதிய சலுகை: 1095ஜிபி டேட்டா: என்ன திட்டம்? வேலிடிட்டி?
- Finance
28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..!
- Lifestyle
காலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோட்டலில் 2 வாழைப்பழம் ஆர்டர் செய்த கமல் பட நடிகர்: பில் ரூ. 442 மட்டுமே
சன்டிகர்: பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் ஸ்டார் ஹோட்டலில் இரண்டு வாழைப்பழம் வாங்கி அதன் விலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் சன்டிகரில் உள்ள ஜே. டபுள்யூ. மாரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார். ஹோட்டலில் இருக்கும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த பிறகு அவர் இரண்டு வாழைப்பழங்கள் ஆர்டர் செய்துள்ளார்.
வாழைப்பழங்களை அவரின் அறைக்கு கொண்டு வந்து கொடுத்துள்ளனர். வாழைப்பழத்துடன் வந்த பில்லை பார்த்த ராகுல் போஸால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.
|
வாழைப்பழம்
2 வாழைப்பழங்களுக்கு ரூ. 442. 50 பில் போட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யையும் சேர்த்து தான் அந்த பில். பில்லை பார்த்த ராகுல் அதிர்ச்சி அடைந்து அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வெல்டன் ஜே.டபுள்.யூ மாரியட் சன்டிகர் என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.
|
பாப்கார்ன்
ராகுல் போஸின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடப்பாவமே இரண்டு வாழைப்பழங்களுக்கு ரூ. 442 பில்லா, இதெல்லாம் பகல் கொள்ளை என்று தெரிவித்துள்ளனர். சிலரோ சார், மல்டிபிளக்ஸுகளுக்கு சென்று படம் பார்க்கும்போது பாப்கார்ன் விலையை பார்த்து நாங்களும் இப்படி தான் ஷாக் ஆகிறோம் என்று கூறியுள்ளனர்.
|
ஹோட்டல்
மாரியட் அறைக்கு எக்கச்சக்க பணம் கொடுத்து தங்கியிருக்கும்போது இரண்டு வாழைப்பழங்களுக்கான பில்லை பார்த்து அதிர்ச்சி அடைவது எல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு ராகுல் போஸ் சார். அறைக்கு கொடுக்கும் காசுடன் ஒப்பிடும்போது இது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். சிலரோ ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளனர்.

விஸ்வரூபம் 2
ராகுல் போஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 தான். முன்னதாக அவர் பூர்ணா: தி ஃபேஸ் ஆஃப் கரேஜ் படத்தை தயாரித்து, இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதற்கு பெயர் போனவர் ராகுல் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.