Vijay - அப்பாவுடைய ஆபரேஷனுக்குக்கூட வரவில்லையா விஜய்?.. இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.ஏ.சிக்கு நடந்த ஆபரேஷன்
சென்னை: Vijay (விஜய்) விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆபரேஷன் நடந்திருக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது.
இளைய தளபதியாக உள்ளே நுழைந்து பின்னர் தளபதியாக மாறியவர் விஜய். நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனத்தையும், உருவ கேலியையும் சந்தித்தவர். அதை பார்த்து பயந்து ஒதுங்காமல் தனது திறமை மேல் நம்பிக்கை வைத்து படிப்படியாக முன்னேறி தற்போது தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர். அவர்தான் தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோ என்று பேசப்படுகிறது.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் படம் லியோ. படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே அதன் ப்ரீ பிஸ்னெஸ் கிட்டத்தட்ட 450 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதேபோல் அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஆடியோ ரைட்ஸும் 24 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக பேசப்படுகிறது.
அதிக சம்பளம்: லியோ படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் குறித்து தகவல்கள் ஒருபக்கம் பறந்துகொண்டிருக்க அடுத்த படத்துக்கு அவரது சம்பளம் குறித்த பேச்சும் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதன்படி தனது 68ஆவது படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பள பேச்சுவார்த்தையே 175 கோடி ரூபாயிலிருந்துதான் ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்.ஏ.சி துணை: இப்படி விஜய் தனக்கென்ற ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் துணையாக இருந்தது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். பல தயாரிப்பாளர்களிடம் சென்று விஜய்யை வைத்து படம் எடுங்கள் என வேண்டுகோள் வைத்தும்; பல இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு அதில் விஜய்யை நடிக்க சொல்லி அறிவுறுத்தியது என பல விஷயங்களை செய்தவர்.
பேச்சுவார்த்தை நிறுத்தம்: இந்த சூழலில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேச்சுவார்த்தையை விஜய் நிறுத்திவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை அப்பா - மகனுக்குள் வரும் சராசரி சண்டைதான் என எஸ்.ஏ.சியும் விளக்கமளித்திருந்தார். மேலும் சமீபத்தில் ஷோபாவுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த விவகாரமும் சர்ச்சையானது.
ஆபரேஷன்: இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்தது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஏதோ சரியில்லை என்று தோன்றியது. உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்தேன்.

அவர் பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொன்னார். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சையும் செய்துகொண்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் எல்லோருக்கும் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். அதை ஏற்றுக்கொண்டு சென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்றார்.
விஜய் வரவில்லையா?: சூழல் இப்படி இருக்க விஜய் நேற்று அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எஸ்.ஏ.சிக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. எப்படியும் விஜய்க்கு இது முன்கூட்டியே தெரியாமல் இருந்திருக்காது. அப்படி இருந்தும் விஜய் வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதப்படுத்தினார் என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் இப்போதாவது தந்தையை சென்று விஜய் சந்திப்பாரா என்றும் கேட்டும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











