சூர்யாவை திடீரென சந்தித்த கேஜிஎஃப் ஹீரோ யாஷ்… ரோலக்ஸ் – ராக்கி பாய் கூட்டணிய பார்க்க ரெடியா?
பெங்களூரு: தமிழில் டாப் ஹீரோவான சூர்யா தற்போது 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த சூர்யாவை கேஜிஎஃப் ஹீரோ யாஷ் நேரில் சந்தித்தார்.

சூர்யா 42
சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று சூர்யா, தற்போது வணங்கான், சூர்யா 42 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் 'வணங்கான்' படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. மிகப் பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் கோவாவில் நடைபெற்று முடிந்தது.

பெங்களூருவில் சூர்யா
'சூர்யா 42' படத்தை முடித்துவிட்டு விரைவில் வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு படத்தில் இணையவுள்ளார் சூர்யா. டிசம்பர் அல்லது ஜனவரியில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென பெங்களூரில் முகாமிட்டுள்ள சூர்யா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள ரசிகர்களை நேரில் சந்தித்தார். சூர்யாவுடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகின. இந்நிலையில், சூர்யாவை பான் இந்தியா சூப்பர் ஸ்டார் யாஷ் நேரில் சந்தித்துள்ளார்.

ரோலக்ஸ் – ராக்கி பாய்
பெங்களூருவில் உள்ள சூர்யாவை கேஜிஎஃப் ஹீரோ யாஷ் நேரில் சென்று சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேஜிஎஃப் படத்தை முடித்துவிட்டு தனது 19வது படத்தில் கமிட் ஆகியுள்ளார் யாஷ். நர்த்தன் இயக்கத்தில் உருவாகும் இதுவும் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சூர்யாவை யாஷ் சந்தித்து பேசியுள்ளது, இருவரும் புதிய படத்தில் இணைகிறார்களா என எதிர்பார்க்க வைத்துள்ளது. விக்ரம் படத்தில் ரோலக்ஸாக மிரட்டிய சூர்யாவும், கேஜிஎஃப்பில் ராக்கி பாயாக அதகளம் செய்த யாஷும் ஒரே படத்தில் இணைந்தால் தெறிமாஸாக இருக்கும் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

வைரலாகும் போட்டோ
இந்நிலையில், சூர்யாவும் யாஷும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னணி நடிகர்களான சூர்யா - யாஷ் சந்திப்பு திரையுலகில் ரொம்பவே ஆரோக்கியமானது என சினிமா ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துக் கூறவே யாஷ் நேரில் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











