For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எம்ஜிஆர் மனதில் இருந்த 2 குறைகள்..ஒரே மாதிரி சிந்தித்த எம்ஜிஆர்-சிவாஜி..ஆரூர்தாஸ் நினைவுகள்

  |

  தமிழ் திரையுலகில் இளங்கோவன், கருணாநிதிக்கு இணையாக பேசப்பட்டவர் ஆரூர் தாஸ். நேற்று தனது 91 ஆம் வயதில் காலமானார்.

  இளங்கோவன் கருணாநிதிகூட ஒரு கட்டத்திற்கு மேல் நீடிக்காத நிலையில் காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு வசன உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஆரூர்தாஸ்.

  ஒரே நேரத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்காக வேறு வேறு ஸ்டைலில் வசனம் எழுதியவர். இருவரின் படங்களின் வெற்றிகரமான கதைவசனகர்த்தாவாக இருந்தவர் ஆரூர்தாஸ்

  தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - ராஜ் டி.வி இயக்குநர் மகள் திருமண அறிவிப்பு!தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - ராஜ் டி.வி இயக்குநர் மகள் திருமண அறிவிப்பு!

   தமிழ் திரையுலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்கள் அனைவரும் தஞ்சைக்காரர்களே

  தமிழ் திரையுலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்கள் அனைவரும் தஞ்சைக்காரர்களே

  தமிழகத்தில் 1940 கள், 50 களில் வசனங்களில் பெரிய அளவில் புரட்சிகர மாற்றம் நிகழ்ந்தது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், கருணாநிதி, திருவாரூர் தங்கராசு வரிசையில் வந்தவர் ஆரூர் தாஸ். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இளங்கோவன் தான் அனைத்து வசனகர்த்தாக்களுக்கும் முன்னோடி. ஜூபிடர் பிக்சர்ஸ்க்காக அவர் வசனம் எழுதிய கண்ணகி படத்தில் கண்ணாம்பா பேசிய வசனம் தான் தன் எழுத்தின் முன்னோடி என கருணாநிதியே குறிப்பிட்ட வசனகர்த்தா. இளங்கோவன் சொந்த ஊர் செங்கல்பட்டு. அவரைத்தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து முன்னணி எழுத்தாளர்களும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது வியத்தகு ஒற்றுமை.

   பாசமலர் படம் மூலம் பெரும் புகழ் பெற்ற ஆரூரார்

  பாசமலர் படம் மூலம் பெரும் புகழ் பெற்ற ஆரூரார்

  இதில் திருவாரூரைச் சேர்ந்தவர்கள் மூன்றுபேர் மூன்றாமவர் ஆரூர் தாஸ், தனது ஊரான திருவாரூரிலிருந்து ஆரூர்தன் பெயரிலிருந்து தாஸையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார். தேவருடன் நெருங்கிப்பழகியவர், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்று ஆசிரியராக போக வேண்டியவர் சினிமா பக்கம் வந்தார். 1953 ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளர் பின்நாளில் தேவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் 1959 ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் வாழவைத்த தெய்வம் படத்தில் வசனம் எழுதினார். 1960-ல் பாசமலர் மூலம் பெரும் புகழ் பெற்றார். சிவாஜிக்காக புதிய பறவை, தெய்வ மகன், பாகப்பிரிவினை என தொடர் படங்கள், கோப்பால் கோபால் வசனமும் அவ்வளவும் நடிப்பா என சிவாஜி கேட்கும் வசனமும் மிகப்பிரபலம்.

   அண்ணன் அண்ணியாய் பழகிய ஜெமினி சாவித்ரி அண்ணன் அண்ணியாய் பழகிய ஜெமினி சாவித்ரி

  அண்ணன் அண்ணியாய் பழகிய ஜெமினி சாவித்ரி அண்ணன் அண்ணியாய் பழகிய ஜெமினி சாவித்ரி

  ஜெமினியும், சாவித்ரியும் ஆரூர்தாஸுக்கு அண்ணன், அண்ணி போன்றவர்கள். சிவாஜி கணேசனை வைத்து பாசமலர் படம் எடுக்கிறார் பீம்சிங் இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் சிவாஜி கணேசன் என்பதால் அவரை பார்த்து வசனகர்த்தா சான்ஸ் வாங்கிவிடலாம் என ஜெமினி அழைக்க போங்கண்ணே அவர் மிகப்பெரியவர் புதியவன் என்னை தேர்வு செய்ய மாட்டார், அவர் ஏதாவது சொன்னால் நான் கோபப்பட்டுவிடுவேன் என ஆரூர்தாஸ் சொல்ல அதெல்லாம் ஆகாது போங்க என்று சாவித்ரி வற்புறுத்தி அனுப்பி வைக்க சிவாஜியுடன் அப்படித்தான் முதல் சந்திப்பு நடந்துள்ளது.

   ஒரு பாசமலர் அல்ல பத்து பாசமலர் எழுதுவான் சிவாஜி கொடுத்த சர்டிபிகேட்

  ஒரு பாசமலர் அல்ல பத்து பாசமலர் எழுதுவான் சிவாஜி கொடுத்த சர்டிபிகேட்

  சிவாஜி கணேசன் ஏற இறங்க பார்த்து யார் இவன் என கேட்க நான் சொன்னேனே ஆரூர் தாஸ் இவர்தான் என சொல்ல இது பெரிய படமாச்சே தாங்குவியான்னு சிவாஜி கேட்க, தமிழ் இலக்கியம் பயின்றவன் ஆசிரியராகி செல்லாம் சினிமா பக்கம் வந்துள்ளேன் என கூறி சிவாஜிக்கு பதில் சொல்லும் விதத்தில் சில திருக்குறள்களை சொல்ல ஆச்சர்யப்பட்ட சிவாஜி ஜெமினி இவன் ஒரு பாசமலர் இல்ல பத்து பாசமலர் எழுதுவான், ஆமா நீ எந்த ஊருன்னு சிவாஜி கேட்டுள்ளார் திருவாரூர் என சொல்ல அட நம்மூரு தம்பின்னு சொல்லி நல்லா வசனம் எழுது போய் தம்பி சண்முகத்திடம் அட்வான்ஸ் வாங்கிக்கன்னு சொல்லி அனுப்பியுள்ளார்.

   சிவாஜிக்காக முதல் படத்திலேயே முத்தான வசனங்கள் அமைத்த ஆரூரார்

  சிவாஜிக்காக முதல் படத்திலேயே முத்தான வசனங்கள் அமைத்த ஆரூரார்

  பாசமலர் படத்தில் ஆரூர் தாஸின் வசனம் மிகப்பிரபலமாக பேசப்பட்டது. முக்கியமாக கடைசி காட்சியில் சிவாஜி கணேசன் பேசும் கைவீசம்மா கைவீசு வசனமும், சிவாஜியும் ஜெமினியும் முதலாளி-சங்கத்தலைவராக மோதிக்கொள்ளும் அனல் தெறிக்கும் வசனங்களும், குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கும் ஜெமினியின் அக்காவும் தனது தாயார் மருமகள் சாவித்ரியை கொடுமைபடுத்தும்போது தங்கவேலு பேசும் சுருக் வசனங்களும் மிக அருமையாக இருக்கும்.

   இரு ஆளுமைகளின் படங்களுக்கும் ஒரே நேரத்தில் வானம் எழுதிய ஆரூரார்

  இரு ஆளுமைகளின் படங்களுக்கும் ஒரே நேரத்தில் வானம் எழுதிய ஆரூரார்

  அதன் பின்னர் சிவாஜியின் ஆஸ்தான கதை வசனகர்த்தாவாக ஆரூர்தாஸ் மாறினார். அதே போல் எம்ஜிஆர் படங்களுக்காக தேவர் பிலிம்ஸ் தா வரிசை படங்களுக்கு அவர் எழுதிய வசனங்களால் ஆரூர்தாஸ் எம்ஜிஆருக்கும் பிடித்துப்போன வசன கர்த்தா ஆனார். ஒரே நேரத்தில் தாயைக்காத்த தனயன், சிவாஜிக்காக படித்தால் மட்டும் போதுமா படத்திற்காகவும் அவர் கதைவசனம் எழுதிய ஒரே நேரத்தில் சிறப்பாக ஓடியது. இதுபோல் இருவருக்குமான பல படங்கள் ஒரே நேரத்தில் இருவருக்கும் எழுதியது ஓடியுள்ளது. சிவாஜிக்காக 32 படங்களும், எம்ஜிஆருக்காக 28 படங்களுக்கும் ஆரூர்தாஸ் வசனம் எழுதியுள்ளார்.

   எம்ஜிஆர் சிவாஜிக்குள் உள்ள ஒற்றுமை

  எம்ஜிஆர் சிவாஜிக்குள் உள்ள ஒற்றுமை

  இப்படி ஓடிய நேரத்தில் ஒரு நாள் எம்ஜிஆரை பார்க்க சென்றபோது எம்ஜிஆர் ஆரூர்தாஸைப்பார்த்து போன படம் வெற்றிகரமாக ஓடியது, இப்ப தாயைக்காத்த தனயனும் வெற்றிகரமாக ஓடுது உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள் என்று எம்ஜிஆர் சொல்ல ஒன்றும் வேண்டாம்ணே உங்க அன்பு இருந்தால் போதும் என்று ஆரூர்தாஸ் சொல்லியிருக்கிறார். சரி நானே பரிசை முடிவு செய்கிறேன் என்று எம்ஜிஆர் அனுப்பி வைத்துள்ளார். அன்று மதியம் சிவாஜியை பார்த்தபோது அவரும் பாசமலர் நல்லா போச்சு அதுக்கு எதுவும் பரிசு தரல இப்ப படித்தால் மட்டும் போதுமா நல்லா போகுது அதுக்கும் சேர்த்து தரணும் என்ன வேணும் சொல் என்றவுடன் சிவாஜியிடமும் அதே பதிலை சொல்லியிருக்கிறார் ஆரூர்தாஸ்.

   ஒரே எண்ணத்தில் இயங்கிய எம்ஜிஆர்-சிவாஜி

  ஒரே எண்ணத்தில் இயங்கிய எம்ஜிஆர்-சிவாஜி

  ஆனால் பின்னர் இருவரும் தங்கத்தில் ஆரூர்தாஸ் பெயர் பொறித்து ஷீல்டு, பதக்கம் கொடுத்துள்ளனர். இருவருக்கும் எப்படி ஒரே சிந்தனை ஒரே நேரத்தில் வந்தது என ஆரூர்தாஸ் யோசித்து பிரமித்து போயுள்ளார். அதேபோல் எம்ஜிஆர் தனது நெருங்கிய அந்தரங்கமான விஷயத்தை எல்லாம் ஆரூர் தாஸுடம் பேசியுள்ளாராம். தனது குழந்தையில்லாத குறை, பட்டம் வாங்காத குறை எம்ஜிஆருக்கு இருந்துள்ளது அதை ஆரூர் தாஸிடம் பகிர்ந்துள்ளாராம் எம்ஜிஆர். எம்ஜிஆருக்காக வித்தியாசமான கதையாக அன்பே வா அதில் நாகேஷ் அடிக்கும் லூட்டி, எம்ஜிஆர் நாகேஷ் சம்பந்தப்பட்ட காட்சி வெகு சிறப்பு. காசு வேணுமே என்பார் நாகேஷ், காசு கொடுத்தால் என்பார் எம்ஜிஆர், காரு கொடுப்பேனே என்பார் நாகேஷ். பிறகு காசை வாங்கிட்டு கார் சாவியை கொடுத்துவிட்டு சார் கிட்டத்தட்ட என் முதலாளி மாதிரி உங்கள மாற்றிட்டேன் (முதலாளியே எம்ஜிஆர் தான்) நம்பிக்கை துரோகம் பண்ணிடாதீங்க சார் என்பார். எம்ஜிஆர் பர்சை தூக்கி காட்டியபடி ஒரு பார்வை பார்த்தப்படி நகருவார். அப்பவும் நாகேஷ் இருக்கட்டும், இருக்கட்டும் அப்பப்ப பார்த்துக்கிறேன் என்பார். இந்த வசனங்கள் எல்லாம் நாகேஷ் காமெடியாய் மிகப்பிரபலம்.

   திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் ஆரூர்தாஸ் புகழ்

  திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் ஆரூர்தாஸ் புகழ்

  தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்ஷங்கர் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் தெலுங்கு படங்களுக்கு டப்பிங் வசனம் எழுதியதில் பெரிய அளவில் பேசப்பட்டவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய இதுதாண்டா போலீஸ் படம் வசனங்களுக்காக பெயர் போனது. அதனாலேயே அந்தப்படம் பெரிய அளவில் இன்றளவும் பேசப்படுகிறது. தனது வசனங்களால் தமிழக திரையுலகை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுமை செலுத்திய ஆரூர்தாஸ் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர். தனது 91 வது வயதில் நேற்று காலமானார். சிவாஜி, எம்ஜிஆர் எனும் இரு ஆளுமைகளைடன் நடைபோட்ட ஆரூர்தாஸ் புகழ் திரையுலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்.

   English summary
   Aurur Das is talked about as after Elangovan and Karunanidhi in the Tamil film industry, He passed away yesterday at the age of 91. While Elangovan Karunanidhi did not last more than a phase, Auroordas was a superstar in the world of verse by adapting to the times. At the same time, MGR wrote dialogues for Shivaji in a different style. Auroordas was the successful storyteller of both the films.
   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X